தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஈரோடு வருகை - பலத்த போலீஸ் பாதுகாப்பு

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (சனிக்கிழமை) ஈரோடு வருவதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஈரோடு வருகை - பலத்த போலீஸ் பாதுகாப்பு
Published on

ஈரோடு,

தமிழக முதல்-அமைச்சரின் சிறப்பு புலனாய்வு பிரிவு போலீஸ் சூப்பிரண்டாக இருப்பவர் ராஜா. இவரது மகளின் திருமணம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது.

இதையொட்டி திருமண வரவேற்பு விழா, ஈரோடு வில்லரசம்பட்டி பகுதியில் உள்ள லட்சுமி துரைசாமி திருமண மண்டபத்தில் இன்று (சனிக்கிழமை) நடக்கிறது. இதில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு, மணமக்களை வாழ்த்துகிறார்.

இதற்காக இன்று மாலை சேலத்தில் இருந்து புறப்படும் அவர் இரவு 7 மணிக்கு ஈரோடு திருமண மண்டபத்துக்கு வந்து விழாவில் பங்கேற்று மீண்டும் சேலம் செல்கிறார்.

அவருக்கு, பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன், மாவட்ட கலெக்டர் சி.கதிரவன், போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் ஆகியோர் உற்சாக வரவேற்பு அளிக்கிறார்கள். முதல்-அமைச்சர் வருகையையொட்டி ஈரோடு மாவட்ட எல்லை முதல், நகர் பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com