தஞ்சை, திருவாரூர், நாகை உள்பட 8 மாவட்டங்களுக்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஒருங்கிணைந்த வளாக அலுவலகம்

தஞ்சை, திருவாரூர், நாகை உள்பட 8 மாவட்டங்களுக்கான தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஒருங்கிணைந்த வளாக அலுவலகம் தஞ்சையில் ரூ.6 கோடியே 60 லட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்டு வருகிறது.
தஞ்சை, திருவாரூர், நாகை உள்பட 8 மாவட்டங்களுக்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஒருங்கிணைந்த வளாக அலுவலகம்
Published on

பிள்ளையார்பட்டி,

தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர் ஆகிய 8 மாவட்டங்களுக்கான தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஒருங்கிணைந்த வளாக அலுவலகம் தஞ்சை-திருச்சி மெயின் ரோட்டில் உள்ள சோழன் நகர் எதிரில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு பின்புறம் புதிதாக கட்டப்பட்டு வருகிறது.

2.6 ஏக்கர் பரப்பளவில், மேல் தளம் 10 ஆயிரம் சதுர அடி பரப்பளவிலும், கீழ்தளம் 10 ஆயிரம் சதுர அடி பரப்பளவிலும் 2 தளங்களாக நபார்டு வங்கி திட்ட நிதியில் இருந்து ரூ.6 கோடியே 60 லட்சம் மதிப்பில் அனைத்து வசதிகளுடன் கூடியதாக கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணிகள் அனைத்தும் தீவிரமாக நடந்து வருகிறது.

ஒரே இடத்தில்...

இந்த புதிய கட்டிடத்தில் தலைமை பொறியாளர் அலுவலகம், மேற்பார்வை பொறியாளர் அலுவலகங்கள்(பொது மற்றும் பாதாள சாக்கடை) கிராம நிர்வாக பொறியாளர் குடிநீர் திட்ட கோட்ட அலுவலகம், உபகோட்ட அலுவலகம், நகரத்திட்ட கோட்ட அலுவலகம், உபகோட்ட அலுவலகம், தணிக்கை பிரிவு ஆகிய அலுவலகங்கள் என அனைத்து அலுவலகங்களும் ஒருங்கிணைந்து செயல்பட உள்ளன.

தற்போது வாடகை கட்டிடங்களில் இயங்கி வரும் இந்த அலுவலகங்கள் அனைத்தும் சோழன் நகர் எதிர்புறம் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடங்களில் ஒருங்கிணைந்த அலுவலகங்களாக ஒரே இடத்தில் செயல்பட உள்ளன. இதனால் பொதுமக்களுக்கு போக்குவரத்து அலைச்சல் மற்றும் காலவிரயம் தவிர்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com