

இது பற்றிய விவரம் வருமாறு:-
தமிழக வீட்டு வசதி வாரியம் சுருக்கமாக டி.என்.எச்.பி. என அழைக்கப்படுகிறது. இந்த அமைப்பு தற்போது தங்கள் துறையில் காலியாக உள்ள உதவி என்ஜினீயர், நில அளவையர், ஜூனியர் டிராப்டிங் அதிகாரி, தொழில்நுட்ப உதவியாளர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் போன்ற பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. மொத்தம் 277 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பணியிடங்கள் வாரியான காலியிட விவரம்: உதவி என்ஜினீயர்: 25, சர்வேயர்: 19, ஜூனியர் டிராப்டிங் அதிகாரி: 19, தொழில்நுட்ப உதவியாளர்: 76, இளநிலை உதவியாளர்: 126, தட்டச்சர்: 12
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்ப்போம்.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 30 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.சி.ஏ., எஸ்.டி, எம்.பி.சி., டி.சி., பி.சி., பி.சி.(எம்.) ஆகிய பிரிவினர் 35 வயதுக்கு உட்பட்டவராக இருந்தாலும் விண்ணப்பிக்கலாம். 1-7-2017-ந் தேதியை அடிப்படையாகக் கொண்டு வயது வரம்பு கணக்கிடப்படுகிறது.
கல்வித்தகுதி:
சிவில் என்ஜினீயரிங் பட்டப்படிப்பு படித்தவர்கள், 10, 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், தட்டச்சு சான்றிதழ் பெற்றவர்கள் ஆகியோருக்கு பணியிடங்கள் உள்ளன. அந்தந்த பணிக்கான கல்வித்தகுதியை இணையதளத்தில் பார்க்கலாம்.
தேர்வு செய்யும் முறை:
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
கட்டணம்:
விண்ணப்பதாரர்கள் ரூ.500 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி.,எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.250 செலுத்தி விண்ணப்பித்தால் போதுமானது.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணைய தளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 30-6-2017-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். இதற்கான எழுத்துத்தேர்வு ஆகஸ்டு மாதம் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.tnhbrecruitment.in என்ற இணையதள முகவரியைப் பார்க்கலாம்.