

ஈரோடு,
முகமது நபி குறித்து இழிவாக பேசிய பா.ஜ.க. நிர்வாகியை கண்டித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினர் ஈரோடு கருங்கல்பாளையம் காந்திசிலை அருகில் நேற்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் சித்திக் தலைமை தாங்கினார்.
மாவட்ட செயலாளர் முகமது லரீப் முன்னிலை வகித்தார். இதில் மாநில செயற்குழு உறுப்பினர் சலீம், மாநகர தலைவர் ஜாகிர்உசேன் உள்பட பலர் கலந்துகொண்டு கோஷங்களை எழுப்பினார்கள். இதில் முகமதுநபியை இழிவாக பேசிய பா.ஜ.க. நிர்வாகியை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இதனால் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட த.மு.மு.க.வினர் 60 பேரை கருங்கல்பாளையம் போலீசார் கைது செய்து, அருகில் உள்ள ஒரு மண்டபத்தில் தங்க வைத்தனர்.