தமிழ்நாடு மாணவர்கள் ஆராய்ச்சி அமைப்பு கவர்னர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைத்தார்

திருச்செங்கோடு கே.எஸ்.ஆர். கல்வி நிறுவனத்தில் கே.எஸ்.ஆர். மகளிர் கலை, அறிவியல் கல்லூரி சார்பில் தமிழ்நாடு மாணவர்கள் ஆராய்ச்சி அமைப்பு தொடங்கப்பட்டு அதன் தொடக்கவிழா நேற்று மாலை கல்லூரி கல்வி நிறுவனர் அரங்கில் நடந்தது.
தமிழ்நாடு மாணவர்கள் ஆராய்ச்சி அமைப்பு கவர்னர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைத்தார்
Published on

திருச்செங்கோடு,
விழாவுக்கு மின்சாரத்துறை அமைச்சர் பி.தங்கமணி தலைமை தாங்கினார். சமூகநலத்துறை அமைச்சர் டாக்டர் சரோஜா, நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.சுந்தரம், பொன்.சரஸ்வதி எம்.எல்.ஏ., சைதை துரைசாமி, டாக்டர் அப்துல்கலாம் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ், மாவட்ட கலெக்டர் ஆசியாமரியம், கே.எஸ்.ரங்கசாமி, துணைத்தலைவர் ஆர்.சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்துகொண்டு தமிழ்நாடு மாணவர்கள் ஆராய்ச்சி அமைப்பை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து வாழ்த்தி பேசினார். கவர்னர் ஆங்கிலத்தில் பேசினாலும் முதலில் அனைவருக்கும் மாலை வணக்கம். சவுக்கியமா இருக்கீங்களா? என்றும் முடிவில் நன்றி, வணக்கம், ஜெய்ஹிந்த் என்றும் தமிழில் பேசினார்.

கவர்னருக்கு கே.எஸ்.ஆர். கல்லூரி தலைவர் டாக்டர் கே.எஸ்.ரங்கசாமி நினைவு பரிசு வழங்கினார். கல்லூரியின் துணைத்தலைவர் சீனிவாசன் அமைச்சர்களுக்கு நினைவு பரிசு வழங்கினார். விழாவில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு சமூக அன்னை தெரசா விருது, பொறியாளர் விருது, இளம் அப்துல்கலாம் விருது, இளம் உ.வே.சா. விருது உள்ளிட்ட விருதுகளை கவர்னர் வழங்கினார். இதில் கே.எஸ்.ஆர். கல்வி நிறுவனங்களின் டீன்கள், முதல்வர்கள், நிர்வாகிகள், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக கே.எஸ்.ஆர். மகளிர் கலை, அறிவியல் கல்லூரி முதல்வர் டாக்டர் கார்த்திகேயன் அனைவரையும் வரவேற்றார். முடிவில் தமிழ்நாடு மாணவர்கள் ஆராய்ச்சி அமைப்பு தலைவர் ரவிக்குமார் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com