அக்காள் கண் எதிரே பரிதாபம்: டேங்கர் லாரி சக்கரத்தில் சிக்கி சிறுவன் பலி
செங்குன்றம் அருகே, மோட்டார் சைக்கிள் மீது டேங்கர் லாரி மோதிய விபத்தில் தனது அக்காள் கண் எதிரேயே டேங்கர் லாரி சக்கரத்தில் சிக்கி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
செங்குன்றத்தை அடுத்த நல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட கலைஞர் நகர் பி.எஸ். தெருவைச் சேர்ந்தவர் செல்வம். இவருடைய மகள் சோனியா (வயது 18). இவருக்கு ஜெயசீலன் (13) என்ற மகனும் இருந்தார்.