கிருஷ்ணகிரி மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் நேற்று திறக்கப்பட்டன. மதுப்பிரியர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து மதுபாட்டில்களை வாங்கி சென்றார்கள்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன
Published on

கிருஷ்ணகிரி,

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் உள்ளது. இதையடுத்து கடந்த, 4-ந் தேதி முதல் ஊரடங்கை தளர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் நேற்று முதல் டாஸ்மாக் கடைகளைத் திறக்கவும் அனுமதி வழங்கி உள்ளது.

இதனால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள, 119 டாஸ்மாக் கடைகளுக்கு முன்பு நேற்று முன்தினம் தடுப்பு அமைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். நேற்று காலை, 10 மணிக்கு டாஸ்மாக் கடைகளில் விற்பனை தொடங்கியது. ஆனால் கிருஷ்ணகிரியில் எதிர்பார்த்த அளவிற்கு கூட்டம் கூடவில்லை. ஒவ்வொரு கடை முன்பும் சுமார் 100 பேர் அளவிற்கே கூட்டம் இருந்தது.

மது விற்பனை

முகக்கசவசம் அணிந்து ஆதார் எண்ணுடன் வந்தவர்களுக்கு மட்டுமே மது விற்பனை செய்யப்பட்டன. ஒவ்வொருவரும் சமூக இடைவெளியை கடைபிடித்து வரிசையில் நின்று மது பாட்டில்களை மதுப்பிரியர்கள் வாங்கிச் சென்றனர். ஆனால் அரசு அறிவித்தது போல் இல்லாமல், வயது வித்தியாசமின்றி வரிசையில் வந்த அனைவருக்கும் மது விற்பனை செய்யப்பட்டன. தமிழக அரசு மது விலையை உயர்த்தியுள்ளதால் எம்.ஆர்.பி., விலையை விட குவாட்டருக்கு, 20 ரூபாய் என ஒரு புல் பாட்டிலுக்கு, 80 ரூபாய் கூடுதலாக விற்பனை நடந்தது. இதனால் சில இடங்களில் டாஸ்மாக் ஊழியர்களுடன் மது வாங்க வந்தவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அனைத்து கடைகளுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com