பெண்களை தரக்குறைவாக பேசும் தி.மு.க.வுக்கு தேர்தலில் தக்க பாடத்தை புகட்டுங்கள் பாண்டியராஜன் பேச்சு

பெண்களை தரக்குறைவாக பேசும் தி.மு.க.வுக்கு இந்த தேர்தலில் தக்க பாடத்தை புகட்டுங்கள் என்று தேர்தல் பிரசாரத்தின்போது அமைச்சர் பாண்டியராஜன் பேசினார்.
பெண்களை தரக்குறைவாக பேசும் தி.மு.க.வுக்கு தேர்தலில் தக்க பாடத்தை புகட்டுங்கள் பாண்டியராஜன் பேச்சு
Published on

சென்னை,

ஆவடி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் அமைச்சர் பாண்டியராஜன், அந்த தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

அதன்படி நேற்று அவர், தண்டுரை, நெமிலிச்சேரி சி.எஸ்.ஐ. தேவாலயம் மற்றும் பருத்திப்பட்டு ஆகிய இடங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது அங்கு கூடியிருந்த மக்கள் மத்தியில், பாண்டியராஜன் பேசியதாவது:-

அ.தி.மு.க. அரசின் சாதனைகள்

அ.தி.மு.க. ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீராக உள்ளதால் தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது. ஜெயலலிதா வழியில் நல்லாட்சி வழங்கும் இந்த ஆட்சி, சிறப்பான நலத்திட்டங்களை மக்களுக்கு வழங்கி வருகிறது. மகளிர் நலன்காக்கும் அரசாகவும், பெண்களை மதிக்கும் அரசாகவும் உள்ளது. அ.தி.மு.க. அரசு கடந்த 4 ஆண்டுகளாக எண்ணற்ற சாதனைகளை நிகழ்த்தி இருக்கிறது.

இந்த சாதனைகள் மீண்டும் தொடர நீங்கள் அனைவரும் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து எங்களை வெற்றி பெறச்செய்யவேண்டும்.

தி.மு.க.வுக்கு தக்க பாடம்

பெண்களை தெய்வமாக போற்றக்கூடிய இந்த மண்ணில் பெண்களை தரக்குறைவாக பேசி வருகிற தி.மு.க.வைச்சேர்ந்தவர்களுக்கு தக்க பாடத்தை இந்ததேர்தலின் மூலம் நீங்கள் புகட்டவேண்டும்.

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் ஒரே கட்சி அ.தி.மு.க.தான். ஆவடி தொகுதிக்கான தேர்தல் அறிக்கையில், நான் கூறியவற்றை வெற்றி பெற்ற உடன் நிச்சயம் நிறைவேற்றுவேன். பாதாள சாக்கடை திட்டம் உள்பட பல்வேறு திட்டங்களை உங்களுக்காக நான் செய்வதற்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெறச் செய்யவேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மகளிர் சுய உதவிக்குழுவினர் உறுதி

பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் அ.ம.மு.க.வைச் சேர்ந்த நிர்வாகிகள் ஆர்.சிவபெருமாள், வி.சங்கர், ஜி.பழனி, ஜி.குணசேகரன், பா.நல்லதம்பி ஆகியோர் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் அமைச்சர் பாண்டியராஜன் முன்னிலையில் தங்களை அ.தி.மு.க.வில் இணைத்துக்கொண்டனர்.

முன்னதாக ஆவடி தொகுதியை சேர்ந்த ஏராளமான மகளிர் சுய உதவிக்குழுவினர், பாண்டியராஜனை சந்தித்து இந்த ஆட்சியே மீண்டும் தொடர தங்களின் வாக்கு உங்களுக்குதான் என்று உறுதியளித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com