ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி; 23-ந் தேதி வரை நடக்கிறது

ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் கல்வி உளவியல் துறையும், பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்வியியல் கல்லூரியும் இணைந்து 7 நாட்கள் நடத்தும் ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி நேற்று கல்லூரியில் தொடங்கியது.
ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி; 23-ந் தேதி வரை நடக்கிறது
Published on

பெரம்பலூர்,

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக கல்வி முகமையுடன், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் கல்வி உளவியல் துறையும், பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்வியியல் கல்லூரியும் இணைந்து 7 நாட்கள் நடத்தும் ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி நேற்று கல்லூரியில் தொடங்கியது. அனுபவ கற்றல் ஆசிரியர் கலைத்திட்டத்தில் சமூக ஈடுபாட்டின் வேலைக்கான கல்வி என்ற தலைப்பில் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சியின் தொடக்க விழாவிற்கு தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார். விழாவில் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகத்தின் பேராசிரியரும், பயிற்சியின் ஒருங்கிணைப்பாளருமான கோவிந்தன் கலந்து கொண்டு பேசினார். இதையடுத்து மகாத்மா காந்தி தேசிய ஊரக கல்வி முகமையின் ஒருங்கிணைப்பாளர் நாக வைஷ்ணவி, சிறப்பு பயிற்றுனர் நவீன்குமார் ஆகியோர் கல்வியியல் கல்லூரி உதவி பேராசிரியர்களுக்கு பயிற்சி அளித்தனர். முன்னதாக தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கல்வியியல் கல்லூரியின் முதல்வர் ராஜலட்சுமி, பேராசிரியர் பாஸ்கரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இதில் உதவி பேராசிரியர்கள் பலர் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். முன்னதாக தனலட்சுமி சீனிவாசன் கல்வியியல் கல்லூரி முதல்வர் சாந்தகுமாரி வரவேற்றார். முடிவில் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் உதவி பேராசிரியர் வாசுதேவன் நன்றி கூறினார். இந்த பயிற்சியானது வருகிற 23-ந்தேதி வரை நடக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com