விமான நிறுவனத்தில் தொழில்நுட்ப பணியிடங்கள்

இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (எச்.ஏ.எல்.) நிறுவனம் மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றாகும், விமானப்படைக் குத் தேவையான விமான வடிவமைப்பு, உபகரணங்கள் தயாரிப்பு உள்ளிட்ட பணிகளை இந்த நிறுவனம் கவனிக்கிறது.
விமான நிறுவனத்தில் தொழில்நுட்ப பணியிடங்கள்
Published on

தற்போது இந்த நிறுவனத்தின் கோராபுட் கிளையில் தொழில்நுட்ப ஆபரேட்டர், பாராமெடிக்கல் ஸ்டாப் உள்ளிட்ட பணிகளுக்கு 70 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பிட்டிங், வெல்டிங், கிரைண்டர், டர்னர், மோல்டர், மில்லிங் போன்ற பிரிவில் ஆபரேட்டர் பணியிடங்கள் உள்ளன.

இந்த பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் 15-12-2017-ந் தேதியில் 28 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வு உண்டு.

10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐ.டி.ஐ. படித்தவர்கள், என்.ஏ.சி. பயிற்சி சான்றிதழ் பெற்றவர்கள், இளநிலை அளவியல் படிப்புடன், ஆபரேசன் தியேட்டர் டெக்னாலஜி, டென்டரில் சர்ஜரி டிப்ளமோ படித்தவர்கள் பாராமெடிக்கல் ஸ்டாப் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

விருப்பமுள்ளவர்கள் ரூ.200 கட்டணம் செலுத்தி இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம், www.halindia.com என்ற இணைய தளத்தில் விரிவான விவரங்களைப் பார்த்துவிட்டு 8-1-2018-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com