ஏரல் அருகே பரபரப்பு தி.மு.க. நிர்வாகி கார் கண்ணாடி உடைப்பு மோட்டார் சைக்கிளும் நொறுக்கப்பட்டது

ஏரல் அருகே தி.மு.க. நிர்வாகியின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது. மேலும் அவரது மோட்டார் சைக்கிளும் நொறுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஏரல் அருகே பரபரப்பு தி.மு.க. நிர்வாகி கார் கண்ணாடி உடைப்பு மோட்டார் சைக்கிளும் நொறுக்கப்பட்டது
Published on

ஏரல்,

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உமரிக்காடு மெயின் ரோடு பகுதியில் வசிப்பவர் உமரி சங்கர். இவர் தி.மு.க. மாநில மாணவரணி துணை செயலாளராக உள்ளார். இவருடைய மனைவி பிரம்மசக்தி. மாவட்ட கவுன்சிலரான இவர் தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினராக உள்ளார்.

நேற்று முன்தினம் மாலையில் கணவன்-மனைவி 2 பேரும் கட்சி பணி தொடர்பாக, வீட்டில் இருந்து வெளியே சென்றனர்.

கார் கண்ணாடி உடைப்பு

அப்போது உமரிசங்கரின் வீட்டுக்கு வந்த மர்மநபர்கள், அங்கு வீட்டு வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார், மோட்டார் சைக்கிள், சக்கிள் போன்றவற்றை அடித்து நொறுக்கினர். இதில் கார் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. பின்னர் வீட்டின் மீது மர்மநபர்கள் முட்டைகளை வீசி விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்..

இதுகுறித்து பிரம்மசக்தி அளித்த புகாரின்பேரில், ஏரல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com