மேட்டுப்பாளையத்தில் பயங்கரம்: ஓட ஓட விரட்டி காண்டிராக்டர் வெட்டிக் கொலை

புதுவை மேட்டுப் பாளையத்தில் காண்டி ராக்டர் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த பயங்கர சம்பவம் தொடர்பாக 5 பேரை பிடித்து போலீசார் அதி ரடியாக விசாரித்து வருகின்றனர்.
மேட்டுப்பாளையத்தில் பயங்கரம்: ஓட ஓட விரட்டி காண்டிராக்டர் வெட்டிக் கொலை
Published on

புதுச்சேரி,

புதுச்சேரி மேட்டுப்பாளை யத்தை அடுத்த தர்மாபுரி பகுதியை சேர்ந்தவர் ஜீவா என்கிற இருசப்பன்(வயது 42). மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டையில் உள்ள தொழிற்சாலைகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் ஆட்களை அனுப்பும் காண்டிராக்டராக இருந்தார். இவருக்கு கல்பனாதேவி(38) என்ற மனைவியும், 2 மகள் களும் உள்ளனர்.

தற்போது காந்திதிருநல்லூர் பகுதியில் புதிதாக உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை தொடங்கு வதற்காக கட்டிடம் கட்டும் பணிகளை செய்து வந்தார். இந்த பணிகளை பார்வையிட மோட்டார் சைக்கிளில் நேற்று காலை ஜீவா சென்றார்.

வெட்டிக்கொலை

அப்போது மேட்டுப் பாளையம் மின்துறை அலு வலகம் அருகே சென்ற அவரை அங்கு வந்த மர்ம நபர்கள் சுற்றி வளைத்தனர். இதைப் பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த ஜீவா அங்கிருந்து தப்பி ஓடி னார். ஆனால் அந்த கும்பல் கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களுடன் விடாமல் துரத்தி ஓட ஓட விரட்டி வெட் டியது. இதனை தடுத்த அவரது வலது கை துண்டானது. மேலும் தலை, கழுத்திலும் வெட்டு விழுந்தது. இதில் படு காயமடைந்து சம்பவ இடத்தி லேயே ஜீவா ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தை பார்த்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். கொலை சம்பவத்தை அரங்கேற்றிய அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் அங்கிருந்து சர்வ சாதா ரணமாக மோட்டார் சைக் கிளில் தப்பிச் சென்றனர்.

மாமூல் கேட்டு தகராறு?

இதுபற்றி தகவல் அறிந்து மேட்டுப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் பிரியா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அங்கிருந்து இருசப்பனின் உடலை கைப்பற்றி பிரேத பரி சோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரித்தனர்.

விசாரணையில், அந்த பகுதியை சேர்ந்த கொலை குற்றவாளிகள் சிலர் ஜீவாவிடம் மாமூல் கேட்டுள் ளனர். அதற்கு அவர் தர மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட தகராறை தொடர்ந்து ஆத்திரமடைந்த அந்த கும்பல் பணம் தர மறுத்த உனது கையை வெட்டி வீசுவோம் என்று ஏற்கனவே எச்சரிக்கை விடுத்து இருந்தது தெரியவந்தது.

இதன் எதிரொலியாக ஜீவா கொலை செய்யப்பட்டாரா? தொழில்போட்டி அல்லது அரசியல் காரணங்களுக்காக கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

5 பேர் சிக்கினர்

பட்டப்பகலில் பொது மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள மேட்டுப்பாளையத்தில் நடந்த இந்த பயங்கர கொலை சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. ஜீவா கொலை தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த ஜோசப், முருகன், ஆகாஷ், சசிக்குமார் உள்பட 5 பேர் போலீஸ் பிடியில் சிக்கியுள்ளனர். ரகசிய இடத்தில் வைத்து அவர் களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசா ரணையின் முடிவில் ஜீவா கொலை செய்யப்பட்டது ஏன்? என்பது பற்றிய தகவல்கள் தெரியவரும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com