கோவை ஈஷா யோக மையத்தில் தேசிய பாதுகாப்பு படை கமாண்டோக்களின் தீவிரவாத தடுப்பு ஒத்திகை

கோவை ஈஷா யோக மையத்தில் தேசிய பாதுகாப்பு படை கமாண்டோக்களின் தீவிரவாத தடுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.
கோவை ஈஷா யோக மையத்தில் தேசிய பாதுகாப்பு படை கமாண்டோக்களின் தீவிரவாத தடுப்பு ஒத்திகை
Published on

கோவை

தேசிய பாதுகாப்பு படையினர் நாடு முழுவதும் தீவிரவாத தடுப்பு ஒத்திகை அவ்வப்போது நடத்துவது வழக்கம். இந்த நிலையில் கோவையின் புறநகர் பகுதியான ஈஷா யோக மையத்தில் நேற்று இரவு 7.30 மணிக்கு பாதுகாப்பு ஒத்திகை நடத்தினார்கள்.

இதில், ஈஷா யோக மையத்தில் தீவிரவாதிகள் நுழைந்து விட்டனர் என்று தகவல் கிடைத்ததும் அருகில் உள்ள ஆலாந்துறை போலீஸ் நிலையத்தில் இருந்து 20 போலீசார் ஈஷா யோக மையத்துக்கு உடனடியாக விரைந்தனர்.

மேலும் தேசிய பாதுகாப்பு படையின் கமாண்டோக்கள் கோவை விமான நிலையத்திலிருந்து ஒரு ஹெலிகாப்டரில் விரைந்தனர். அவர்கள் வந்த ஹெலிகாப்டர் தரையிறங்காமல் பறந்தபடியே இருந்தது.

அதிலிருந்து கயிறு மூலம் கீழே குதித்த கமாண்டோக்கள் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதற்கிடையில் மருத்துவ குழுவினர், வருவாய்த் துறை அதிகாரிகள், தீயணைப்பு படையினரும் ஈஷா யோக மையத்துக்கு விரைந்தனர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:- தேசிய பாதுகாப்பு படையினர் வழக்கமாக நடத்தும் பாதுகாப்பு ஒத்திகை தான் இது. ஒரு இடத்தில் தீவிரவாத தாக்குதல் போன்ற அசம்பாவித சம்பவம் நடந்தால் போலீஸ் உள்பட சம்பந்தப்பட்ட துறையினர் எவ்வளவு சீக்கிரத்தில் அந்த இடத்துக்கு செல்கிறார்கள் என்பதை கணக்கிடுவதற்காக தான் இந்த ஒத்திகை நடத்தப்பட்டது. இதே போல ஒத்திகை கோவை மாநகரில் இன்று (புதன் கிழமை) நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com