

குளித்தலை,
குளித்தலை அரசு கலைக்கல்லூரியில் உள்ள 12 இளநிலை பாடப்பிரிவுகளுக்கு மாணவ-மாணவிகள் சேர்க்கைக்கான முதற்கட்ட கலந்தாய்வு நடந்து முடிந்துள்ளது. இதில் 492 இடங்கள் நிரப்பப்பட்டது. இதனையடுத்து 2-வது கட்ட கலந்தாய்வு தரவரிசை அடிப்படையிலும், இட ஒதுக்கீட்டின் அடிப்படையிலும் அடுத்த மாதம் (ஜூன்) 7-ந்தேதி நடைபெறவுள்ளது. இதில் இளநிலை தமிழ் பாடப்பிரிவில் 3 காலியிடங்களும், ஆங்கிலத்தில் 8, கணிதவியலில் 5, இயற்பியலில் 2, மின்னணுவியலில் 5, வேதியலில் 1, உணவு மற்றும் ஊட்டச்சத்துவியலில் 5, கணினி அறிவியலில் 2, கணினி பயன்பாட்டியலில் 9, வணிகவியலில் 1, வணிகவியல் (கணினி பயன்பாட்டியியலில்) 3, மேலாண்மை பாடப்பிரிவில் 9 என மொத்தம் 53 காலியிடங்கள் உள்ளன.
இட ஒதுக்கீடு அடிப்படையில்...
இதில் இட ஒதுக்கீடு அடிப்படையில் பிற்படுத்தப்பட்டோருக்கு 22 இடங்கள், முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டில் 11 இடங்களும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் 4 இடங்கள், பட்டியல் இனத்தவருக்கான பிரிவில் 3 இடங்கள், அருந்ததியர் பிரிவில் 11 இடங்கள், பழங்குடியினர் பிரிவில் 2 இடங்கள் காலியாக உள்ளன.
மாணவ-மாணவிகள் சேர்க்கைக்கான விண்ணப்பத்தை தாமதமாக கல்லூரியில் சமர்ப்பித்த விண்ணப்பதாரர்களும் 2-வது கட்ட கலந்தாய்வில் கலந்துகொள்ளலாம். கல்லூரி சேர்க்கைக்கு வரும் மாணவ-மாணவிகள் தங்களின் மாற்று சான்றிதழின் அசல் மற்றும் நகல்கள் 2, சாதி சான்றிதழின் அசல், நகல்கள் 2, ஆதார் அட்டையின் அசல், நகல்கள் 2, பாஸ்போர்ட் புகைப்படங்கள் 2, கட்டணத்தொகை ஆகியவற்றை கொண்டுவரவேண்டும்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.