40 அடி நீள ராட்சத திமிங்கலம் செத்து கரை ஒதுங்கியது

நவிமும்பை உரண் கடற்கரையில் சுமார் 40 அடி நீளமுள்ள ராட்சத திமிங்கலம் இறந்த நிலையில் கரை ஒதுங்கியது.
40 அடி நீள ராட்சத திமிங்கலம் செத்து கரை ஒதுங்கியது
Published on

மும்பை,

நவிமும்பை உரண் கார்தண்டா கடற்கரையில் நேற்று காலை 8 மணியளவில் ராட்சத திமிங்கலம் ஒன்று செத்து கரை ஒதுங்கி கிடந்தது. இதை பார்த்த அந்த பகுதியை சேர்ந்த மீனவர்கள் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து கடற்கரை பகுதிக்கு சென்று அதிகாரிகள் அந்த திமிங்கலத்தின் உடலை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதில் திமிங்கலத்தின் உடல் அழுகி போய் இருந்தது தெரியவந்தது. அந்த திமிங்கலம் செத்து இரண்டு வாரங்களுக்கு மேல் இருக்கும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

அந்த திமிங்கலம் சுமார் 40 அடி நீளம் கொண்டதாக இருந்தது. அதன் எடை 4 டன் வரை இருக்கும் என அந்த பகுதியை சேர்ந்த மீனவர்கள் தெரிவித்தனர்.

இதற்கிடையே அந்த திமிங்கலத்தை உடற்கூறு ஆய்வு செய்து அப்புறப்படுத்தும் பணிகள் நடந்தன. மராட்டிய கடற்கரைகளில் கடந்த மூன்று ஆண்டுகளில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய 8-வது திமிங்கலம் இதுவாகும். இதேபோல 85 கடல் வாழ் உயிரினங்கள் செத்து கரை ஒதுங்கி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com