ஏழைகளை தேடிச்சென்று அ.தி.மு.க. அரசு உதவுகிறது: அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு

ஏழை, எளிய மக்களுக்கு தேடிச்சென்று உதவும் அரசாக அ.தி.மு.க. உள்ளது என அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கூறினார்.
ஏழைகளை தேடிச்சென்று அ.தி.மு.க. அரசு உதவுகிறது: அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு
Published on

சிவகாசி,

சிவகாசி தொகுதி விஸ்வநத்தம் பஞ்சாயத்து முனீஸ்வரன் காலனியில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கிராம மக்களை நேரடியாக சந்தித்து குறைகளை கேட்டறிந்து மனு வாங்கினார். முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, சாலை வசதி உள்பட பல்வேறு கோரிக்கை மனுக்களை அமைச்சர் பெற்றுக்கொண்டார். பின்னர் பொதுமக்கள் மத்தியில் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேசும்போது கூறியதாவது:-

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வழியில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. அரசை தேடி பொதுமக்கள் சென்ற நிலை மாறி மக்களை நோக்கி அரசு உதவிகள் என்பதன் அடிப்படையில் அ.தி.மு.க. அரசு தொகுதி மக்களிடம் நேரடியாக சென்று குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்து வருகிறது.

ஏழை, எளிய மக்களுக்கு தேடிச்சென்று உதவும் ஆட்சியாக அ.தி.மு.க. ஆட்சி நடைபெறுகிறது. அதன் அடிப்படையில் இந்த கிராமத்திற்கு நான் உங்களை தேடி வந்துள்ளேன். அனைத்து மனுக்களையும் விரைந்து பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சிவகாசியில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் தாமிரபரணி கூட்டுக்குடிநீரை நாங்கள் கொடுத்துள்ளோம். இனி சிவகாசி தொகுதியில் தண்ணீர் பற்றாக்குறை என்பதே ஏற்படாதவாறு தாமிரபரணி தண்ணீர் கொடுத்து நிரந்தர தீர்வு ஏற்படுத்தி கொடுத்துள்ளோம். உங்களுக்காக நாங்கள் தொடர்ந்து உழைத்துக்கொண்டு இருப்போம். நீங்கள் எப்போது வேண்டுமானாலும் என்னை தொடர்பு கொண்டு குறைகளை கூறலாம். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள், அ.தி.மு.க. நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com