கரூரில் ஓவிய கண்காட்சி பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்

கரூரில் நடந்த ஓவியக்கண்காட்சியை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.
கரூரில் ஓவிய கண்காட்சி பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்
Published on

கரூர்,

கரூர் மாவட்ட எம்.எஸ்.தேவசகாயம் நினைவு கலை, கைவினைகள் மையம் சார்பில் கரூரில் ஓவிய கண்காட்சி நடைபெற்றது. இதில் கரூர், சென்னை, புதுக்கோட்டை உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஓவியர்கள் பங்கேற்று தாங்கள் வரைந்து ஓவியங்களை கண்காட்சியில் வைத்திருந்தனர்.

இயற்கையை பாதுகாப்பதன் அவசியத்தை உணர்த்தும் ஓவியம், காந்தி, நேரு உள்பட தலைவர்களின் ஓவிய படங்கள், சணல் கயிற்றினால் செய்யப்பட்ட யானை மற்றும் சேலை உள்பட துணிகளில் தீட்டப்பட்ட பல்வேறு ஓவியங்கள் காட்சிக்காக வைக்கப்பட்டு இருந்தது. இதனை பள்ளி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் பார்வையிட்டனர்.

கண்காட்சியையொட்டி 3 வயது முதல் 10 வயது வரையிலான சிறுவர்களுக்கு ஓவியபோட்டி நடத்தப்பட்டு பரிசுவழங்கப்பட்டது. மேலும் ஓவியத்தின் கூறுகளும்-கொள்கைகளும், 20-ம் நூற்றாண்டு ஓவிய நிகழ்வுகள், ஓவிய பந்தம், மன வண்ணங்கள் என்பன உள்ளிட்ட ஓவியக்கலையின் பெருமையை உணர்த்தும் விதமாக நூல்களை வெளியிட்ட ஓவிய ஆசிரியர்கள் புகழேந்தி, நாகராஜன், ஸ்டுபர்ட் சிபி, மணிகண்டன் உள்ளிட்ட ஓவிய ஆசிரியர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.

இதில் திருக்குறள் பேரவை செயலாளர் மேலை பழனியப்பன், கவிஞர் கருவை வேணு, எழில்வாணன், கடவூர் மணிமாறன் மற்றும் ஓவிய ஆசிரியர்கள் குழந்தைவேல், செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com