படுகொலை செய்யப்பட்டவர் புதுமாப்பிள்ளை போலீசார் விசாரணையில் அடையாளம் தெரிந்தது

ராமநாதபுரம் அருகே படுகொலை செய்யப்பட்டவர் புதுமாப்பிள்ளை போலீசார் விசாரணையில் அடையாளம் தெரிந்தது
படுகொலை செய்யப்பட்டவர் புதுமாப்பிள்ளை போலீசார் விசாரணையில் அடையாளம் தெரிந்தது
Published on

ராமநாதபுரம்,

ராமநாதபுரத்தை அருகே அம்மன் கோவில் கிராமம் அருகே கடந்த சில நாட்களுக்குமுன் வாலிபர் ஒருவர் கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இதுகுறித்து ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில் கொலை செய்யப்பட்ட வாலிபர் ராமநாதபுரம் ஓம்சக்திநகர் 8-வது தெருவை சேர்ந்த சோனைக்குமார் என்பவருடைய மகன் அருண்குமார்(வயது 31) என்பது தெரியவந்துள்ளது. இவருக்கு கடந்த 11.6.2017 அன்று தான் திருமணம் நடந்துள்ளது. வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த அருண்குமார் திருமணம் செய்வதற்காக ராமநாதபுரம் வந்துள்ளார். இந்த நிலையில் திருமணமான சில நாட்களில் புதுமாப்பிள்ளை படுகொலை செய்யப்பட்டதற்கான காரணம் தெரியவில்லை. அவரது கைவிரல் ரேகையை வைத்தும் ஆதார் எண் மூலம் இறந்தவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரது குடும்பத்தினரும் அருண்குமாரின் உடலை அடையாளம் காட்டினர். புதுமாப்பிள்ளை கொலைக்கான காரணம் குறித்து கேணிக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமரன் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com