தமிழகத்தில் “பேப்பர் கப் ”பயன்பாட்டிற்கு விதிக்கப்பட்ட தடையை திரும்பப்பெற வேண்டும்

தமிழகத்தில் ‘பேப்பர் கப்’ பயன்பாட்டிற்கு விதிக்கப்பட்ட தடையை திரும்பப்பெற வேண்டும் என்று மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழகத்தில் “பேப்பர் கப் ”பயன்பாட்டிற்கு விதிக்கப்பட்ட தடையை திரும்பப்பெற வேண்டும்
Published on

கரூர்,

கரூர் ராமானூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில், தமிழ்நாடு- பாண்டிச்சேரி பேப்பர் கப் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் மாநில் நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாநில தலைவர் கரூர் சிவக்குமார் தலைமை தாங்கினார். மாநில பொது செயலாளர் பாலசண்முகம் முன்னிலை வகித்தார். மாநில பொருளாளர் ஹரிஹரன் வரவேற்று பேசினார். கூட்டத்தில் பேப்பர் கப் தயாரிப்பில் மெழுகு உள்ளிட்டவை சேர்க்கப்படுவதாக குற்றம் சாட்டி தமிழக அரசு வருகிற 2019-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி முதல் பேப்பர் கப்பை தடை செய்ய உத்தரவிட்டுள்ளது. பேப்பர் கப் தயாரிக்கும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தமிழக அரசு இதனை திரும்ப பெற வேண்டும். மேலும் பேப்பர் தயாரிப்பின் போது உணவு தர சான்றிதழ் பெற்ற திரவம் தான் காகிதத்தில் பூசப்படுகிறது.

எனவே தவறான தகவல் பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் இந்த கூட்டத்தின் போது தமிழ்நாடு- பாண்டிச்சேரி பேப்பர் கப் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மேலும் சங்க நிர்வாகிகள் பேசுகையில், பேப்பர் கப் தயாரிப்புக்கான மூலப்பொருள் தமிழ்நாடு காகித ஆலை நிறுவனத்திடம் இருந்து தான் பெறப்படுகிறது. எனவே இதனை பயன்படுத்துவதால் எவ்வித உடல்உபாதைகளும் பொதுமக்களுக்கு ஏற்படாது. எனவே இதனை தொடர்ந்து பயன்பாட்டில் வைக்க அரசு ஆதரவளிக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com