தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற 2 வயது சிறுவன் மீது கொடூர தாக்குதல்

வாத்தலை அருகே தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற 2 வயது சிறுவன் கொடூரமாக தாக்கப்பட்டான்.
தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற 2 வயது சிறுவன் மீது கொடூர தாக்குதல்
Published on

சமயபுரம்,

வாத்தலை போலீஸ் சரகம் பாச்சூரை சேர்ந்தவர் விநாயகம் (வயது 42). இவரது மனைவி கற்பகம் (37). இவர்களது ஒரே மகன் ஹரிஸ்குமார் (2). விநாயகத்திற்கு சொந்தமாக திருச்சி-சேலம் நெடுஞ்சாலையில் உள்ள நொச்சியத்தில் அரவை அரிசி ஆலை உள்ளது. இவர் தினமும் காலையில் அரிசி ஆலைக்கு சென்று பணியை முடித்து விட்டு இரவு தான் வீட்டுக்கு வருவார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மின்சாரம் இல்லாத காரணத்தால் வீட்டிலிருந்த அவர் தனக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளில் மகன் ஹரிஸ்குமாரை முன்பக்கத்தில் அமரவைத்துக்கொண்டு கடைவீதிக்கு சென்றார். அப்போது, அதே ஊரை சேர்ந்த அசோக் (45) என்பவர் மோட்டார் சைக்கிளை வழி மறித்து ஹரிஸ்குமாரை துண்டைப்போட்டு கீழே இழுத்து கொடூரமாக தாக்கினார். இதனால் அதிர்ச்சியடைந்த விநாயகம் அவரை தட்டிக்கேட்டார். அவரையும் தாக்கி விட்டு வண்டியை கீழே தள்ளி விட்டு, அசோக் ஓட முயன்றார்.

இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அசோக்கை பிடித்து தர்மஅடி கொடுத்தனர். இது தொடர்பாக வாத்தலை போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பொதுமக்களின் பிடியில் இருந்த அசோக்கை மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் அசோக் தாக்கியதில் படுகாயம் அடைந்த ஹரிஸ் குமார் மண்ணச்சநல்லூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டான். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் ஹரிஸ்குமார் சேர்க்கப்பட்டான்.

இந்த சம்பவம் தொடர்பாக வாத்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து அசோக் சிறுவனை எதற்காக தாக்கினார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே அசோக் இதேபோல் மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவரை தாக்கியுள்ளார் என்று அப்பகுதியினர் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com