பஸ் கட்டண உயர்வு எதிரொலி: ரெயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது

பஸ் கட்டண உயர்வு எதிரொலியாக திருச்சி ரெயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
பஸ் கட்டண உயர்வு எதிரொலி: ரெயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது
Published on

திருச்சி,

தமிழக அரசு பஸ் கட்டணத்தை சமீபத்தில் உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு அரசியல் கட்சியினரும், கல்லூரி மாணவ-மாணவிகளும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். பஸ் கட்டணத்தை கிட்டத்தட்ட இருமடங்கு அளவுக்கு உயர்த்தியதால் சாமானிய மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள். இதனால் பெரும்பாலானவர்கள் பஸ் பயணத்தை தவிர்த்து ரெயில்களில் சென்று வருகிறார்கள். கடந்த 26-ந் தேதி வெள்ளிக்கிழமை குடியரசு தின விடுமுறை, அடுத்து சனி, ஞாயிறு என தொடர் விடுமுறை வந்ததால் வெளியூர்களில் தங்கி படிப்பவர்களும், பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றுவோரும் சொந்த ஊருக்கு திரும்பினர்.

இதனை தொடர்ந்து 3 நாள் விடுமுறை முடிந்து நேற்று(ஞாயிற்றுக்கிழமை) பலர் ஊருக்கு திரும்பினர். இதனால் ரெயில் நிலையத்தில் நேற்று பயணிகள் கூட்டம் அலைமோதியது. வழக்கமாக இதுபோன்ற தொடர் விடுமுறை நாட்களில் பஸ் நிலையத்தில் தான் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். ஆனால் பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டதன் எதிரொலியாக நேற்று ரெயில் நிலையத்தில் கூட்டம் அதிகமாக இருந்தது. நேற்று காலை முதல் திருச்சி ரெயில் நிலையம் வழியாக சென்ற அனைத்து ரெயில்களிலும் முன்பதிவில்லா பெட்டிகளில் மக்கள் முண்டியடித்து கொண்டு ஏறினர். கூட்ட நெரிசல் காரணமாக முன்பதிவில்லா பெட்டிகளில் அமர இடம் கிடைக்காததால் பெரும்பாலானோர் நின்று கொண்டே பயணம் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com