பஸ் நிலையத்தில் தூங்கி கொண்டிருந்த வியாபாரியிடம் ரூ.8 ஆயிரம் பறிப்பு 2 பேருக்கு வலைவீச்சு

கும்பகோணம் அருகே பஸ் நிலையத்தில் தூங்கி கொண்டிருந்த வியாபாரியிடம் ரூ.8 ஆயிரத்தை பறித்து சென்ற 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
பஸ் நிலையத்தில் தூங்கி கொண்டிருந்த வியாபாரியிடம் ரூ.8 ஆயிரம் பறிப்பு 2 பேருக்கு வலைவீச்சு
Published on

கும்பகோணம்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள எலும்மிச்சங்கா பாளையம் பகுதியை சேர்ந்தவர் சவுந்தர்ராஜன். இவருடைய மகன் ராஜ்மோகன். இவர் கும்பகோணம் காய்கறி மார்க்கெட்டில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். சம்பவத்தன்று ராஜ்மோகன் காய்கறி வியாபாரத்தை முடித்து விட்டு கும்பகோணம் அருகே உள்ள தாராசுரம் பஸ் நிலையத்தில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 மர்ம நபர்கள் ராஜ்மோகன் கால்சட்டை பையில் வைத்திருந்த ரூ.8 ஆயிரத்தை திருட முயன்றனர்.

அப்போது சுதாரித்துக்கொண்டு தூக்கத்தில் இருந்த கண்விழித்த ராஜ்மோகன் அவர்களை பிடிக்க முயன்றார். ஆனால் மர்மநபர்கள் இருவரும் அவரது கால்களை இறுக்கமாக பிடித்துக்கொண்டு கால்சட்டை பையில் இருந்த ரூ.8 ஆயிரத்தை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜ்மோகன் இது குறித்து கும்பகோணம் தாலுகா போலீசில் புகார் செய்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வியாபாரியிடம் இருந்து பணத்தை பறித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com