

திண்டுக்கல் :
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள சன்னம்பட்டியை சேர்ந்தவர் ஜெயராஜ். விவசாயி.
இவர், காளை கன்றுக்குட்டி ஒன்றை வளர்த்து வருகிறார். நேற்று அவர் தனது தோட்டத்தில் அந்த கன்றுக்குட்டியை மேயவிட்டிருந்தார்.
அப்போது தோட்டத்தில் உள்ள சுமார் 70 அடி ஆழமுள்ள கிணற்றில் கன்றுக்குட்டி தவறி விழுந்தது.
கிணற்றில் 40 அடி வரை தண்ணீர் இருந்தது. தண்ணீரில் நீந்தியபடி கன்றுக்குட்டி உயிருக்கு போராடிக்கொண்டிருந்தது.
இதனை கண்ட ஜெயராஜ் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து வேடசந்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு அவர் தகவல் தெரிவித்தார்.
அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் போஸ் தலைமையிலான வீரர்கள் அங்கு விரைந்தனர்.
பின்னர் கிணற்றில் விழுந்த கன்றுக்குட்டியை சுமார் ஒரு மணி நேரம் போராடி உயிருடன் மீட்டனர்.