

திருவள்ளூரை அடுத்த பேரம்பாக்கம் அருகே உள்ள நரசிங்கபுரம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வமணி. இவரது மனைவி ரேவதி. இவர்களுக்கு 2 வயதில் குழந்தை ஒன்று உள்ளது.
குழந்தை பிறந்ததிலிருந்து செல்வமணி குழந்தையையும் ரேவதியையும் பார்க்கச் செல்லவில்லை. இதைத்தொடர்ந்து ரேவதி தன் கணவர் வீட்டுக்கு சென்றபோது அவரை ஏற்க மறுப்பு தெரிவித்த செல்வமணி மற்றும் அவரது தந்தை சம்பத், தாயார் சாந்தி ஆகியோர் ரேவதியை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதை தொடர்ந்து ரேவதி அளித்த புகாரின் பேரில் மப்பேடு போலீசார் செல்வமணி மற்றும் அவரது தந்தை சம்பத், தாயார் சாந்தி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.