

தூத்துக்குடி,
சேலம் மாவட்டம் மகுடம் சாவடியை சேர்ந்தவர் தனபால்(வயது 25). இவருக்கும், தூத்துக்குடியை சேர்ந்த 14 வயது சிறுமிக்கும் கடந்த 31-ந் தேதி எட்டயபுரம் வெட்காளியம்மன் கோவிலில் வைத்து திருமணம் நடந்தது. இது குறித்து தகவல் அறிந்த புதுக்கோட்டை யூனியன் சமூக நலத்துறை அதிகாரி பேச்சியம்மாள் தூத்துக்குடி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் வழக்கு
அதன்பேரில் தூத்துக்குடி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வனிதா விசாரணை நடத்தி, சிறுமியை திருமணம் செய்த தனபால், சிறுமியின் தாய், புரோக்கர்கள் சுதந்திரா(60), செல்லம்மாள் மற்றும் மணமகனின் பெற்றோர் ஆகிய 6 பேர் மீது குழந்தை திருமணம் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தார். தொடர்ந்து சிறுமியின் தாய் மற்றும் புரோக்கர் சுதந்திரா ஆகியோரிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.