மாணவர் சரத்பிரபுவின் மரணம் குறித்து சி.பி.ஐ.விசாரணை நடத்த வேண்டும்

மருத்துவ மாணவர் சரத்பிரபுவின் மரணம் குறித்து சி.பி.ஐ.விசாரணை நடத்த வேண்டும் என்று திருப்பூரில் மகிளா காங்கிரஸ் மாநில தலைவி ஜான்சிராணி கூறினார்.
மாணவர் சரத்பிரபுவின் மரணம் குறித்து சி.பி.ஐ.விசாரணை நடத்த வேண்டும்
Published on

திருப்பூர்,

மகிளா காங்கிரசின் திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் பார்க் ரோட்டில் உள்ள ஐ.என்.டி.யு.சி. அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு, மகிளா காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் கார்த்தீஸ்வரி தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட தலைவர் கோபி, ஐ.என்.டி.யு.சி. மாவட்ட பொதுச்செயலாளர் ஜவஹர், எஸ்.சி. பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளர் செல்வகுமார், மாவட்ட சிறுபான்மை பிரிவு நிர்வாகி முத்து இஸ்மாயில் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் சரவணன் ஆகியோர் முன்னிலைவகித்தனர்.

கூட்டத்தில், தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் மாநில தலைவி ஜான்சிராணி கலந்து கொண்டு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர், டெல்லியில் மர்மமான முறையில் மரணம் அடைந்த சரத்பிரபுவின் வீட்டிற்கு சென்று துக்கம் விசாரித்தார்.

முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்த போது கூறியதாவது:-

தமிழக அரசு அறிவித்துள்ள பஸ் கட்டண உயர்வுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன். பல கோடி ரூபாய் செலவு செய்து எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா அரசு சார்பில் கொண்டாடப்படுகிறது. ஆனால் போக்குவரத்து துறையில் நஷ்டம் ஏற்பட்டு விட்டதாக கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இதனால் பஸ் கட்டணத்தை அதிகரித்து வெளியிட்டுள்ள அறிவிப்பை திரும்ப பெற வேண்டும். ஹஜ் பயணம் மேற்கொள்ளும், முஸ்லிம்களுக்கு மானியத்தை ரத்து செய்ததை வன்முறையாக கண்டிக்கிறோம். திருப்பூர் மருத்துவ மாணவர் சரத்பிரபுவின் மரணம் குறித்து சி.பி.ஐ விசாரணை மேற்கொண்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் திருப்பூர் பகுதியில் உள்ள அடிப்படை பிரச்சனைகளான ரேஷன்கடை, தண்ணீர் பிரச்சினை, சாக்கடை வசதிகளை உடனடியாக செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 50 சதவிதம் இட ஒதுக்கீடு உள்ளது. அதனால் பெண்களை கொண்டு கட்சியை வலுப்படுத்தி, வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் அவர்களை பங்கு பெற வைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 1 வருடங்களே உள்ள நிலையில் அதிக வாக்குகள் பெற்று, மத்தியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை பிரதமராக ஆக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com