செல்போன் பறித்து வந்த சிறுவன் உள்பட 6 பேர் கைது

ரெயில் பயணிகளை தாக்கி செல்போன் பறித்து வந்த சிறுவன் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
செல்போன் பறித்து வந்த சிறுவன் உள்பட 6 பேர் கைது
Published on

அம்பர்நாத்,

மத்திய ரெயில்வேயின் மெயின் வழித்தடத்தில் உள்ள கல்யாண் ரெயில் நிலைய பகுதியில், ரெயில் பயணிகளை தாக்கி ஒரு கும்பல் செல்போன்களை பறித்து வருவதாக கல்யாண் ரெயில்வே போலீசுக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து செல்போன் பறிக்கும் கும்பலை பிடிப்பதற்காக போலீசார் தீவிரமாக கண்காணித்தனர்.

இந்த நிலையில், சம்பவத்தன்று கல்யாணில் இருந்து கிளம்பி சென்று கொண்டிருந்த புஸ்பக் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்த மும்பை கொலபாவை சேர்ந்த சமீர் என்பவர் வாசற்படியில் இருந்து செல்போனில் பேசி கொண்டிருந்துள்ளார்.

அப்போது தண்டவாளத் தின் அருகே நின்று கொண்டிருந்த ஒரு சிறுவன் உள்பட இரண்டு பேர் அவரை கம்பால் தாக்கி, கீழே விழுந்த அவரது செல்போனை எடுத்து கொண்டு ஓடினர். அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் இதை கவனித்து இரண்டு பேரையும் விரட்டினர்.

இதில் சிறுவன் மட்டும் பிடிபட்டான். அவனுடன் இருந்தவர் ஓடி விட்டார். இந்த நிலையில் சிறுவன் கொடுத்த தகவலின் பேரில், ரெயில் பயணிகளை தாக்கி செல்போன் பறிக்கும் சம்பவத்தில் தொடர்புடைய அஜித் பரத் (வயது23), தீபக் சங்கர் (20), அதுல் தத்தா (21), முகமது வாஷிம் (30), மிலிந்த் தத்தாத்ரே (21) ஆகிய 5 பேர் பிடிபட்டனர். போலீசார் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com