திருவாரூரில் மேதின கொடியேற்று விழா- பேரணி

திருவாரூரில் மே தின கொடியேற்று விழா மற்றும் பேரணி நடைபெற்றது.
திருவாரூரில் மேதின கொடியேற்று விழா- பேரணி
Published on

திருவாரூர்,

திருவாரூரில் மே தினத்தையொட்டி தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பில் 26 இடங்களில் கொடியேற்று விழா நடந்தது. இதில் தென்னக ரெயில்வே மஸ்தூர் யூனியன் சங்க கொடியேற்று விழாவிற்கு சங்கத்தின் கிளை செயலாளர் மோகன்ராஜ் தலைமை தாங்கி கொடியை ஏற்றி வைத்தார். தொழிற் சங்க கூட்டமைப்பின் தலைவர் ராமலிங்கம், செயலாளர் குணசேகரன், பொருளாளர் சுவாமிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி தலைவர்கள் லால்பகதூர், பாலசுப்பிரமணியன், இளைஞரணி செயலாளர் சுரேஷ்குமார், இளைஞரணி தலைவர் வினோத், நிர்வாகிகள் காளிமுத்து, செல்வம், மாரியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருவாரூர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்டக்குழு அலுவலகத்தில் கட்சியின் மாவட்ட செயலாளர் நாகராஜன் கொடியை ஏற்றி வைத்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கலைமணி, நகர செயலாளர் ராமசாமி, நகரக்குழு உறுப்பினர்கள் கிருஷ்ணன், சோமசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

துப்புரவு பணியாளர்கள் பேரணி

திருவாரூர் சி.ஐ.டி.யூ. மாவட்டக்குழு அலுவலகத்தில் கொடியினை மாவட்ட துணைத்தலைவர் பழனிவேல் ஏற்றி வைத்தார். சங்க தலைவர்கள் சோமசுந்தரம், பாஸ்கரன், சிவராமன், கோவிந்தராஜ், மோகன், மணி உள்பட கலந்து கொண்டனர். சி.ஐ.டி.யூ. மற்றும் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் 2 குழுக்களாக பிரிந்து கொடியை ஏற்றினர். நிகழ்ச்சியில் அரசு ஊழியர் சங்கத்தின் மாநில செயலாளர் சவுந்தரராஜன், மாவட்ட செயலாளர் பைரவநாதன், மாவட்ட பொருளாளர் சோமசுந்தரம், சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் முருகையன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் திருவாரூர் கிளை அலுவலகத்தில் நடந்த மே தின விழாவிற்கு நிர்வாகி சுந்தரமூர்த்தி தலைமை தாங்கி கொடியை ஏற்றி வைத்தார். இதில் ஆட்டோ தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் அனிபா, பி.எஸ்.என்.எல் ஊழியர் சங்க கிளை செயலாளர் நெப்போலியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். திருவாரூர் நகராட்சி துப்புரவு பணியாளர் சங்கத்தின் சார்பில் மே தின பேரணி ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு நகராட்சி அலுவலகத்தை அடைந்தது. இதில் துப்புரவு பணியாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

திருவாரூர் டாஸ்மாக் மாவட்ட அலுவலகம் அருகில் தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் சார்பில் மே தின கொடியேற்று விழா நடந்தது. விழாவிற்கு சங்க மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். ஆட்டோ சங்க மாவட்ட பொருளாளர் முகமது இசாக் முன்னிலை வகித்தார். அமைப்பு சாரா தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் காந்தி ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்க கொடியை ஏற்றி வைத்தார்.

இதேபோல திருவாரூர் அருகே உள்ள புதுப்பத்தூர், தென்மருதூர், திருக்காரவாசல், மாவூர் ஆகிய இடங்களில் தமிழ்நாடு சோசலிச தொழிலாளர்கள், கட்டுமானம் அமைப்பு சாரா சங்கம் சார்பில் தொழிலாளர் தின பேரணி மற்றும் கொடியேற்று விழா நடந்தது. விழாவிற்கு மாநில பொதுச்செயலாளர் முருகையன் தலைமை தாங்கி, சங்க கொடியினை ஏற்றி வைத்தார். இதில் நிர்வாகிகள் கண்ணையன், நாராயணன், மணிமாறன், சிங்காரவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மன்னார்குடி

மன்னார்குடியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மேதின கொடியேற்று விழா கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. விழாவுக்கு ஏ.ஐ.டி.யூ.சி நகர தலைவர் ஏ.பார்த்திபன் தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சி கொடியினை மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் வை.சிவபுண்ணியம் ஏற்றி வைத்தார். ஏ.ஐ.டி.யூ.சி. கொடியினை கட்சியின் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் வை.செல்வராஜ் ஏற்றி வைத்தார். இதை தொடர்ந்து ஆட்டோ மற்றும் மோட்டார் சைக்கிள் ஊர்வலம் நடைபெற்றது. பழைய தஞ்சை ரோடு, மூன்றாம் தெரு வழியாக சென்று கீழப்பாலத்தில் ஊர்வலம் நிறைவடைந்தது.

அதனை தொடர்ந்து மன்னார்குடி பி.எஸ்.என்.எல் அலுவலகம், ஆட்டோ ஸ்டாண்ட், உதவி கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட 29 இடங்களில் ஏ.ஐ.டி.யூ.சி. சங்க கொடியேற்றப்பட்டது.

நீடாமங்கலம்

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி சார்பில் நீடாமங்கலம் தொடக்கப்பள்ளியில் நடந்த மே தின விழாவிற்கு கூட்டணியின் வட்டார தலைவர் கவுசல்யா தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜூலியஸ், மாவட்ட துணைச் செயலாளர் பழனிசெல்வி, முன்னாள் வட்டார தலைவர் பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் திராளானோர் கலந்து கொண்ட னர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com