அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை கலெக்டர் திறந்து வைத்தார்

அரியலூர் மாவட்டம்,திருமானூர் ஒன்றியம்,திருமழபாடியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் சார்பில்,நேரடி நெல் கொள்முதல் நிலையம் நேற்று திறக்கப்பட்டது.
அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை கலெக்டர் திறந்து வைத்தார்
Published on

திருமானூர்,

மாவட்ட கலெக்டர் லட்சுமி பிரியா நெல்கொள்முதல் நிலையத்தை தொடங்கி வைத்து பேசியதாவது:- அரியலூர் மாவட்டத்தில் 19 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தொடங்கிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதில் இன்று (நேற்று) 7 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு செயல்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. மாவட்டத்தில் நான் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி, கட்டிடங்கள் திறந்து வைத்திருந்தாலும், அதனைவிட விவசாயிகளுக்கு மிகவும் பயன்படக் கூடிய இந்த நேரடி நெல் கொள்முதல் நிலையத்தினை திறந்து வைப்பதில் மிகவும் மகிழ்ச்சியுடன் பெருமையடைகிறேன்.

விவசாய பெருமக்கள் தங்கள் விலை நிலத்தில் விளைந்த நெல்லை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்று அரசு நிர்ணயம் செய்த தொகையினை தங்கள் வங்கி கணக்கில் நேரடியாக பெற்று பயனடையலாம். நெல்கொள் முதல் நிலையத்தில் ஏதேனும் குறைகள் ஏற்பட்டால் உடனடியாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் அல்லது மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்குமாறும், இந்த நெல்கொள்முதல் நிலையத்தை விவசாயிகள் பயன்படுத்தி பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் கூறினார். நிகழ்ச்சியில், இணை இயக்குனர் (வேளாண்மைத்துறை) அய்யாசாமி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் உமாமகேஸ்வரி, மண்டல துணை மேலாளர் முத்தையா, உதவி மேலாளர் (தரக்கட்டுப்பாடு) கலைமணி, கண்காணிப்பாளர் தங்கையன், வேளாண்மை உதவி இயக்குனர் (பொறுப்பு) சாந்தி, வேளாண் அலுவலர் வடிவேல் மற்றும் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com