கோவிலுக்கு தானமாக கொடுத்த நிலத்துக்கான தாமிரப்பட்டயம் புராதன பொருளாக பராமரிக்கப்படுகிறது

கோவிலுக்கு தானமாக கொடுத்த நிலத்துக்கான தாமிரப்பட்டயம் புராதன பொருளாக பராமரிக்கப்படுகிறது ஐகோர்ட்டில் அரசு தகவல்.
கோவிலுக்கு தானமாக கொடுத்த நிலத்துக்கான தாமிரப்பட்டயம் புராதன பொருளாக பராமரிக்கப்படுகிறது
Published on

சென்னை,

திருவாரூர் மாவட்டம் திருக்கண்ணமங்கையில் உள்ள பக்தவச்சல பெருமாள் கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. இந்த கோவிலுக்கு அரசர் விஜயரகுநாத நாயக்கர் 1608-ம் அண்டில் 400 ஏக்கர் நிலம் தானமாக வழங்கினார். இதற்காக தாமிரப்பட்டயம் எழுதி வைக்கப்பட்டது. தற்போது 400 ஏக்கர் நிலத்தில் 7 ஏக்கர் மட்டுமே கோவில் கட்டுப்பாட்டில் உள்ளது. அரசர் எழுதி வைத்த தாமிரப்பட்டயமும் மாயமாகி விட்டது என்று சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் யானை ராஜேந்திரன் என்பவர் வழக்கு தொடர்ந்து உள்ளார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், காணாமல் போனதாக கூறப்படும் தாமிரப்பட்டயம் புராதன பொருளாக அறிவிக்கப்பட்டு, நாகை மாவட்டம் அறநிலையத்துறை இணை ஆணையர் கட்டுப்பாட்டில் உள்ளது என்று கூறினார். இதையடுத்து, கோவிலுக்கு சொந்தமான 400 ஏக்கர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்து 5 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com