ஓசூரில் 5-ம் நூற்றாண்டை சேர்ந்த நடுகல் கண்டுபிடிப்பு

ஓசூரில் 5-ம் நூற்றாண்டை சேர்ந்த நடுகல் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
ஓசூரில் 5-ம் நூற்றாண்டை சேர்ந்த நடுகல் கண்டுபிடிப்பு
Published on

ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தேர்பேட்டை பகுதியில், தெருவோரம் நடுகல் புதைந்திருப்பதாக, கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று மைய நிர்வாகிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் வரலாற்று மைய தலைவரும், ஓசூர் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான கே.ஏ.மனோகரன் தலைமையில் நிர்வாகிகள் மற்றும் மாவட்ட பா.ஜனதா செயலாளர் ராஜி ஆகியோர் தேர்பேட்டை பகுதிக்கு சென்று நடுகல்லை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, தெப்பக்குளம் அருகே சாலையோரம், 3 ஆடி ஆழத்தில் 10 அடி உயரம் கொண்ட ஒரு நடுகல் புதைந்த நிலையில் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதை யடுத்து அந்த நடுகல் தோண்டி எடுக்கப்பட்டது.

இந்த நடுகல்லில் அமர்ந்த நிலையில் உள்ள பெண்ணின் கையில் கத்தி, கழுத்தின் அருகே இருப்பது போன்றும், சிவலோகத்திற்கு பெண்ணை அழைத்து செல்வது போலவும் காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளன. அத்துடன் சிவலிங்கம், நந்தி மற்றும் சில பெண்கள் நிற்பது போலவும் காட்சிகள் உள்ளன. இந்த நடுகல் 5-ம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்கலாம் என வரலாற்று மையத்தினர் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com