மதுரை வடக்கு தொகுதியில் உதயசூரியன் உதிக்கும்; தி.மு.க. வேட்பாளர் கோ.தளபதி பிரசாரம்

மதுரை வடக்கு சட்டசபை தொகுதி தி.மு.க. வேட்பாளராக அந்த கட்சியின் மாநகர் மாவட்ட செயலாளர் கோ.தளபதி போட்டியிடுகிறார்.
தி.மு.க. வேட்பாளர் கோ.தளபதி பிரசாரம்
தி.மு.க. வேட்பாளர் கோ.தளபதி பிரசாரம்
Published on

அவருக்கு பல்வேறு அமைப்பினர் தொடர்ந்து ஆதரவு தெரிவித்த வண்ணம் உள்ளனர். கோ.தளபதி, வடக்கு தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வீடு, வீடாக சென்று வாக்கு சேகரித்து வருகிறார். நேற்று அவர் கடச்சனேந்தல் பகுதியில் வாக்கு சேகரித்தார். அப்போது அவருக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு உள்பட பலர் வாக்கு சேகரித்தனர். பெண்கள் ஆரத்தி எடுத்து கோ.தளபதியை வரவேற்றனர்.

பிரசாரத்தின் போது கோ.தளபதி பேசியதாவது:

மதுரை வடக்கு தொகுதி கடந்த 10 ஆண்டுகளாக எந்த வளர்ச்சியும் இல்லாமல் உள்ளது. இருள் சூழ்ந்து இருக்கும் வடக்கு தொகுதியில் இனி உதயசூரியன் உதிக்கும். அப்போது இருள் அகன்று மக்களின் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு கிடைக்கும். அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதே எனது தலையாய கடமை என மக்களுக்கு உறுதி அளிக்கிறேன். இந்த பகுதியில் உள்ள மக்களுக்கு குடிநீர் கிடைப்பதில் கூட சிக்கல் இருக்கிறது. எனவே இங்குள்ள அனைத்து பகுதிகளுக்கும் தடையின்றி குடிநீர் கிடைப்பதற்கு வழிவகை செய்வேன். இல்லந்தோறும் குழாய் மூலம் சுத்தமான குடிநீர் கிடைக்க வழிவகை செய்வேன். அதே போல் பாதாள சாக்கடை வசதி, தெருவிளக்கு உள்பட அத்தியாவசிய பணிகளை மேம்படுத்துவேன்.

மண்ணின் மைந்தன்

இந்த பகுதிகளில் சாலைகள் அனைத்தும் சேதம் அடைந்துள்ளன. நான் வெற்றி பெற்றவுடன், இந்த பகுதிகளில் உள்ள அனைத்து சாலைகளும் விடுதலின்றி சீரமைக்கப்படும். தேவைப்படும் இடங்களில் பேவர் பிளாக் சாலைகள் போடப்படும். மிக முக்கியமாக தகுதியான அனைவருக்கும் முதியோர் உதவித்தொகை, விதவை தொகை உள்பட அரசின் உதவித்தொகைகள் மக்களுக்கு எளிதாக கிடைக்க நடவடிக்கை எடுப்பேன். இந்த மண்ணின் மைந்தனான எனக்கு மக்கள் முழு ஆதரவு தரவேண்டும். பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவதற்கு மக்கள் ஆதரவு தர வேண்டும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com