நீதிபதிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டியது அரசின் கடமை

நீதிபதிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டியது அரசின் கடமை என்று முன்னாள் முதல்-மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
நீதிபதிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டியது அரசின் கடமை
Published on

பெங்களூரு,

பெங்களூருவில் உள்ள லோக் அயுக்தா அலுவலகத்திற்குள் புகுந்து நீதிபதி விஸ்வநாத் ஷெட்டியை தேஜூராஜ் சர்மா என்பவர் கடந்த 7-ந் தேதி கத்தியால் குத்திக் கொலை செய்ய முயன்றார். பலத்தகாயம் அடைந்த நீதிபதி, விட்டல் மல்லையா ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நீதிபதி விஸ்வநாத் ஷெட்டியை நேற்று முன்னாள் முதல்-மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா சந்தித்தார். பின்னர் நீதிபதியிடம் அவர் உடல் நலம் குறித்து விசாரித்தார். பின்னர் எஸ்.எம்.கிருஷ்ணா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

லோக் அயுக்தா நீதிபதி விஸ்வநாத் ஷெட்டியை குத்திக் கொலை செய்ய முயன்ற சம்பவம் நடந்திருக்கிறது. இது மிகுந்த வேதனை அளிக்கிறது. இதுபோன்ற சம்பவங்கள் இனிவரும் நாட்களில் நடைபெறாத வண்ணம் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டியது அவசியமானதாகும். நீதிபதிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டியது அரசின் கடமையாகும். லோக் அயுக்தா அலுவலகத்திற்கு அரசு கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும்.

நீதிபதியை கொல்ல முயன்ற நபருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். அவருக்கு தகுந்த தண்டனை கிடைக்க, அதற்கான சாட்சி ஆதாரங்களை திரட்டி போலீசார் கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும். இந்த சம்பவம் மட்டும் அல்ல எந்த ஒரு வழக்கிலும் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று கொடுக்க வேண்டியது போலீசாரின் கடமையாகும்.

இவ்வாறு எஸ்.எம்.கிருஷ்ணா கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com