அரசியல் கட்சிகளின் அழுத்தத்திற்கு ஆளாகாமல் தேர்தல் ஆணையம் தன்னிச்சையாக முடிவெடுக்க வேண்டும்

அரசியல் கட்சிகளின் அழுத்தத்திற்கு ஆளாகாமல் தேர்தல் ஆணையம் தன்னிச்சையாக முடிவெடுக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் தெரிவித்தனர். மதுரை திருமங்கலத்தை சேர்ந்த தாமோதரன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
அரசியல் கட்சிகளின் அழுத்தத்திற்கு ஆளாகாமல் தேர்தல் ஆணையம் தன்னிச்சையாக முடிவெடுக்க வேண்டும்
Published on

மதுரை,

கருணாநிதி மரணம் அடைந்ததால், திருவாரூர் தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்த தொகுதிக்கு கடந்த ஜனவரி 28-ந்தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஆனால் தமிழகத்தில் கஜா புயல் மீட்பு பணிகளை காரணம் காட்டி, தமிழக அரசு எழுதிய கடிதத்தின் அடிப்படையில் இடைத்தேர்தல் அறிவிப்பை ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டது. இது சட்டவிரோதம்.

தேர்தல் அறிவிப்பை ரத்து செய்வதற்கு முன்பாக மத்திய அரசிடம் ஆலோசனை கேட்டு இருக்க வேண்டும். ஆனால் அதுபோல தேர்தல் ஆணையம் கேட்கவில்லை. எனவே திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் அறிவிப்பை ரத்து செய்து தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வக்கீல், கஜா புயல் பாதிப்பு காரணமாக தேர்தலை நடத்துவதற்கு உகந்த சூழ்நிலை திருவாரூர் தொகுதியில் இல்லை என்பதை அனைத்து கட்சிகளும் வலியுறுத்தியதன்பேரிலும், போதிய அவகாசம் இல்லை என்பதாலும் தான் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது என்று வாதாடினார்.

அதற்கு நீதிபதிகள், தேர்தல் அறிவிப்புக்கு முன்பாகவே அங்குள்ள சூழ்நிலை பற்றி ஆலோசித்து ஏன் முடிவு செய்யவில்லை என கேள்வி எழுப்பினர். அரசியல் கட்சிகளின் அழுத்தத்திற்கு ஆளாகாமல் தேர்தல் ஆணையம் தன்னிச்சையாக முடிவெடுக்க வேண்டும் என்றனர். மேலும், எதிர்காலத்தில் இதுபோன்று நடக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இந்த வழக்கில், தேர்தலை ரத்து செய்வது குறித்து மத்திய சட்டத்துறையிடம் பெறப்பட்ட ஒப்புதலுடன் பதில் மனுவை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை வருகிற 14-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com