மர்ம நபர்கள் நடமாட்டம் எதிரொலி: கடற்கரை பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு

மர்ம நபர்களின் நடமாட்டம் இருப்பதாக கூறப்பட்டதையொட்டி மணமேல்குடி கடற்கரை பகுதிகளில் போலீசார் தீவிர காண்காணிப்பில் ஈடுபட்டனர்.
மர்ம நபர்கள் நடமாட்டம் எதிரொலி: கடற்கரை பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு
Published on

மணமேல்குடி,

மணமேல்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள கடற்கரை பகுதிகளில் மர்ம நபர்கள் சிலர் சுற்றித்திரிவதாக மணமேல்குடி கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் வந்தது. தகவலின் பேரில் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் ஜவகர் மற்றும் போலீசார் மணமேல்குடி, பொன்னகரம், வடக்குஅம்மாபட்டினம், கட்டுமாவடி, கிருஷ்ணாஜிபட்டினம்,மும்பாலை ஆகிய கடற்கரை பகுதிகளில் தீவிர சோதனை மேற் கொண்டனர் .

அப்போது கடற்கரை பகுதிகளில் உள்ள படகுகளை சோதனை மேற்கொண்டனர். தொடர்ந்து கடற்கரை பகுதிகளில் நின்றுகொண்டிருந்த நபர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். மேலும் மீனவர்களிடம் இருந்த அடையாள அட்டைகளை சரிபார்த்தனர் .

மேலும் கிழக்கு கடற்கரை சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்ட னர் மேலும் ரோந்து படகின் மூலம் கடலுக்குள் சென்று மீனவர்களிடம் விசாரணை மேற்கொண்டு கடலில் இருந்த படகுகளை சோதனை செய்தனர். கடலோர பகுதிகளில் இந்த திடீர் சோதனையால் மீனவர்கள் மத்தியில் பர பரப்பை ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com