கோவை தனியார் கல்லூரியில், கான்கிரீட் தூண் உடைந்ததால் சாரம் சரிந்து 5 பேர் படுகாயம் - அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை

கோவையில் தனியார் கல்லூரியில் கான்கிரீட் தூண் உடைந்ததால் அதன் மேல் அமைத்திருந்த சாரம் சரிந்து விழுந்ததில் 5 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கோவை தனியார் கல்லூரியில், கான்கிரீட் தூண் உடைந்ததால் சாரம் சரிந்து 5 பேர் படுகாயம் - அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை
Published on

பீளமேடு,

கோவை பீளமேட்டில் சி.ஐ.டி. கல்லூரி உள்ளது. இங்கு ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த கல்லூரி வளாகத் தில் புதிய கட்டிடம் கட்டுமான பணி நடந்து வருகிறது. அங்கு தரைத்தள பணி முடிக்கப்பட்டு முதல் மாடி அமைக்க கான்கிரீட் தூண்கள் (பில்லர்) அமைக்கப்பட்டு உள்ளன. அதற்கு மேல் கான்கிரீட் போடு வதற்காக கம்புகள் மற்றும் பலகைகளால் ஆன சாரம் அமைக் கப்பட்டு உள்ளது. அதன் மீது கான்கிரீட் போடும் பணி நேற்று காலையில் நடந்தது. இதில் வடமாநிலத்தை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கான்கிரீட் போடும் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது கான்கிரீட் தூண் ஒன்று திடீரென்று உடைந்தது. இதனால் அதன் மீது கான்கிரீட் போடப்பட்ட சாரமும் சரிந்து விழுந்தது. இதன் காரணமாக அதன் மீது நின்று வேலை செய்து கொண்டு இருந்த பீகார் மாநிலத்தை சேர்ந்த போபன் பஸ்வான் (வயது 25), காம் பிரகாஷ் (40), ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ராம்சுரத் (25), கோலவ்வண் (22), சுனில் விஷால் (20) ஆகிய 5 பேர் இடிபாடுகளுக் குள் சிக்கிக்கொண்டனர்.

அவர்கள் வலி தாங்க முடியாமல் அலறி துடித்தனர். உடனே மற்ற தொழிலாளர்கள் அலறியடித்தபடி ஓடி வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் இது குறித்த தகவலின் பேரில் பீளமேடு போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர் கள் அங்கு இடிபாடுகளுக்குள் சிக்கி படுகாயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த 5 பேரை போராடி மீட்டனர். பிறகு அவர்கள் 5 பேரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக் கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இது குறித்து போலீசார் கூறும்போது, அளவுக்கு அதிகமான பாரம் காரணமாக கான்கிரீட் தூண் உடைந்து உள்ளது. இதனால் தான் அதன் மீது அமைத் திருந்த சாரமும் சரிந்து இருக்கிறது. கான்கிரீட் தரம் குறித்து ஒப்பந்ததாரரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com