சிதம்பரம் (தனி) நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணும் மையத்தை தேர்தல் பொது பார்வையாளர் பார்வையிட்டார்

சிதம்பரம் (தனி) நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தை தொகுதி பொது பார்வையாளர் குல்கர்னி நேரில் பார்வையிட்டார்.
சிதம்பரம் (தனி) நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணும் மையத்தை தேர்தல் பொது பார்வையாளர் பார்வையிட்டார்
Published on

அரியலூர்,

அரியலூர் மாவட்டம். ஜெயங்கொண்டம் அருகே உள்ள தத்தனூர் மீனாட்சி ராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள சிதம்பரம் (தனி) நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தை தொகுதி பொது பார்வையாளர் குல்கர்னி நேரில் பார்வையிட்டார். அப்போது அங்கு சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட அரியலூர், ஜெயங்கொண்டம், குன்னம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில் மற்றும் சிதம்பரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட மின்னணு வாக்குப்பெட்டிகளை வைக்க உள்ள பாதுகாப்பு அறைகள், வாக்கு எண்ணப்பட உள்ள மையங்கள், தேர்தல் மேற்பார்வையாளர்கள் அறைகள், ஊடக மையம் ஆகியவை உள்ள இடங்களையும், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் பார்வையிட்டார். அவருடன் மாவட்ட வருவாய் அதிகாரி பொற்கொடி, உடையார்பாளையம் கோட்டாட்சியர் ஜோதி, தாசில்தார்கள் கதிரவன், குமரய்யா ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com