மீன்சுருட்டி, ஆண்டிமடத்தில் அரசு கட்டிடங்கள், அம்மா பூங்கா - தலைமை கொறடா திறந்து வைத்தார்

மீன்சுருட்டி, ஆண்டிமடத்தில் அரசு கட்டிடங்கள், பூங்காவை அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் திறந்து வைத்தார்.
மீன்சுருட்டி, ஆண்டிமடத்தில் அரசு கட்டிடங்கள், அம்மா பூங்கா - தலைமை கொறடா திறந்து வைத்தார்
Published on

மீன்சுருட்டி,

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி பகுதியில் உள்ள சுகாதாரத்துறையின் சார்பில் புதிய கூடுதல் மருந்து கட்டிடம், ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் மற்றும் குண்டவெளி கிராமத்தில் பால் உற்பத்தியாளர்கள் சங்கம் ஆகிய வற்றின் திறப்பு விழா நடைபெற்றது. இவற்றை மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி தலைமையில், அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி பார்வையிட்டார். அப்போது கர்ப்பிணிகளுக்கு அம்மா தாய்சேய் நலப் பெட்டகத்தை வழங்கி பேசினார். ராமஜெயலிங்கம் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட துணை செயலாளர் தங்கபிச்சமுத்து, ஜெயங்கொண்டம் ஒன்றிய செயலாளர் கல்யாணசுந்தரம், கூட்டுறவு சங்க தலைவர் ராஜாரவி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பொய்யாமொழி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் ஆண்டிமடம் ஒன்றியம் தில்லை நகரில் தமிழக அரசின் தாய் திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சத்தில் அம்மா பூங்கா மற்றும் ரூ.5 லட்சத்து 79 ஆயிரத்தில் கட்டப்பட்ட அம்மா உடற்பயிற்சி கூட திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் தலைமை தாங்கி திறந்து வைத்தார்.

ராமஜெயலிங்கம் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். ஆண்டிமடம் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளரும், அழகாபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவருமான சிலம்பூர்.மருதமுத்து வரவேற்றார். இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com