ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதாக அரசு உத்தரவிட்டு இருப்பது கண்துடைப்பு நாடகம்- வைகோ பேட்டி

ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதாக அரசு உத்தரவிட்டு இருப்பது கண்துடைப்பு நாடகம் என்று வைகோ கூறினார்.
ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதாக அரசு உத்தரவிட்டு இருப்பது கண்துடைப்பு நாடகம்- வைகோ பேட்டி
Published on

கோவை

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்டது. பிரதமர் மோடியின் கைப்பாவையாக இந்த அரசு செயல்படுகிறது. கலெக்டரை கோவில்பட்டிக்கு அனுப்பி விட்டு துப்பாக்கி சூடு சம்பவத்தை அரங்கேற்றி உள்ளனர். சாதாரண உடையில் இருந்த போலீசார், நவீன ரக துப்பாக்கியால் பொதுமக்களை குறிபார்த்து சுட்டுள்ளனர். மகளுக்கு சோறு கொண்டு சென்ற அப்பாவி பெண்ணையும் சுட்டுள்ளனர். ஸ்டெர்லைட் ஆலை ஊழியர் குடியிருப்பு தாக்கப்பட்டது என்று சொன்னார்கள். ஆனால் ஒரு சேதமும் ஏற்படவில்லை. ஒரு போலீசாருக்காவது பலத்த காயம் உள்ளதா?. போலீசாரே வாகனங்களுக்கு தீவைத்து உள்ளனர். திட்டமிட்டு சுடுவதற்கு உத்தரவிட்டுவிட்டு, தாசில்தார் மீது பழிபோடுகிறார்கள். மக்கள் உள்ளம் எரிமலை. அது வெளிப்பட்டே தீரும். மக்களின் கொந்தளிப்பினால் அமைச்சர்கள் ஊருக்கள் செல்ல முடியாது. போலீஸ் பாதுகாப்புடன் செல்கிறார்கள்.

ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதாக தமிழக அரசு உத்தரவிட்டு இருப்பது கண்துடைப்பு நாடகம். அன்று நான் போட்ட வழக்கில் ஜெயலலிதா இதே போன்று உத்தரவிட்டார். ஆனால் சுப்ரீம் கோர்ட்டு ஆலையை செயல்பட உத்தரவிட்டது. இந்த அரசு முழுக்க முழுக்க ஸ்டெர்லைட் ஆலை இயங்குவதற்கு உறுதுணையாக உள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையை இயங்க விட மாட்டேன். 1 லட்சம் மக்களை கொண்டு முடக்குவோம். என்னை ஒவ்வொரு தேர்தலிலும் தோற்கடிக்க ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் செயல்பட்டது. என்னைப்பற்றி தவறாக வலைத்தளத்தில் பதிவு செய்கிறார்கள்.

தற்போது நியூட்ரினோ திட்டத்துக்கு கிளம்பிவிட்டார் என தவறாக சித்தரித்ததால் எனது கட்சியை சேர்ந்த ஒருவர் தீக்குளித்து இறந்து விட்டார். ஸ்டெர்லைட் விவகாரத்தில் நான் 52 கோடி ரூபாய் வாங்கியதாக வதந்தியை சமூக வலைதளத்தில் பரவவிட்டுள்ளனர். இது சம்பந்தமாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்து உள்ளேன். தூத்துக்குடியில் நடைபெற்ற படுகொலைக்கு முக்கிய காரணம் இந்த அரசுதான். எனவே முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com