குறைந்த எண்ணிக்கையில் மாணவர்கள் உள்ள தொடக்கப்பள்ளிகளை மூடும் முடிவை அரசு திரும்பப்பெற வேண்டும்

குறைந்த எண்ணிக்கையில் மாணவர்கள் உள்ள தொடக்கப்பள்ளிகளை மூடும் முடிவை அரசு திரும்பப்பெற வேண்டும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில தலைவர் பேட்டி.
குறைந்த எண்ணிக்கையில் மாணவர்கள் உள்ள தொடக்கப்பள்ளிகளை மூடும் முடிவை அரசு திரும்பப்பெற வேண்டும்
Published on

புதுக்கோட்டை,

தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில பொதுக்குழு கூட்டம் புதுக்கோட்டையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் சுரேஷ் தலைமை தாங்கி பேசினார். மாநில பொருளாளர் சிவக்குமார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து சங்கத்தின் மாநில தலைவர் சுரேஷ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், ஒவ்வொரு ஆண்டும் மே மாத இறுதியில் ஆசிரியர் பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு நடத்தப்படும். இந்த ஆண்டு இதுவரை பொது மாறுதலுக்கான அறிவிப்பை அரசு வெளியிடவில்லை. உடனடியாக கலந்தாய்வு நடத்துவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு அரசு மேல்நிலைப்பள்ளியிலும் 10 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். ஆசிரியர்கள், மாணவர்கள் விகிதாசாரத்தை 1:40 என்ற விகிதத்தில் நிர்ணயம் செய்ய வேண்டும். ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் மீது அரசு மேற்கொண்டு வரும் பழிவாங்கும் நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும். தமிழகத்தில் தற்போது நிலவும் குடிநீர் தட்டுப்பாடு காரணமாக அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு தேவையான குடிநீர் கிடைக்கவில்லை.மகளிர் பள்ளிகளில் கழிவறைகளில் தண்ணீர் இல்லாததால் பள்ளி மாணவிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே அரசு பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அரசு உடனடியாக போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து உள்ளாட்சி அமைப்புகள் மூலம் அரசு பள்ளிகளுக்கு குடிநீர் மற்றும் கழிவறை வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். தமிழகத்தில் குறைந்த எண்ணிக்கையில் மாணவர்கள் உள்ள தொடக்கப்பள்ளிகளை மூடும் நடவடிக்கையை அரசு மேற்கொண்டு வருகிறது. இதனால் ஏழை மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகிவிடும். எனவே அரசு இந்த முடிவை திரும்பப்பெற வேண்டும், என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com