சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தமிழக கவர்னர் தரிசனம் உண்டியலில் காணிக்கை செலுத்தினார்

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேற்று மாலை சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தரிசனம் செய்தார். அப்போது உண்டியலில் காணிக்கை செலுத்தினார்.
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தமிழக கவர்னர் தரிசனம் உண்டியலில் காணிக்கை செலுத்தினார்
Published on

சமயபுரம்,

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேற்று மாலை திருச்சியில் இருந்து கார் மூலம் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்தார். சமயபுரம் வந்த கவர்னரை லால்குடி கோட்டாட்சியர் கோவிந்தராஜுலு, கோவில் இணை ஆணையர் குமரதுரை, மண்ணச்சநல்லூர் தாசில்தார் மகாலெட்சுமி, ச.கண்ணனூர் பேரூராட்சி செயல் அலுவலர் (பொறுப்பு) குமரன், மண்ணச்சநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ. பரமேஸ்வரி ஆகியோர் வரவேற்றனர். கோவிலின் பின்பக்க வழியாக உள்ளே வந்த கவர்னர் அங்குள்ள விநாயகரை முதலில் தரிசனம் செய்தார். பின்னர் தங்ககொடி மரத்தை தொட்டு வணங்கிய பின் மூலஸ்தானத்தில் மாரியம்மனை பயபக்தியுடன் வணங்கினார். பின்னர் கோவிலில் வைக்கப்பட்டிருந்த உண்டியலில் காணிக்கை செலுத்தினார். அவருக்கு கோவில் அர்ச்சகர்கள் மாலை அணிவித்து பிரசாதம் வழங்கினர். தொடர்ந்து கோவில் சார்பாக நினைவு பரிசும் வழங்கப்பட்டது.

பக்தர்களை அனுமதிக்கவில்லை

கவர்னரின் வருகையையொட்டி திருச்சி போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் தலைமையில் சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானவேலன் மேற்பார்வையில் 350-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கவர்னர் கோவிலுக்கு வந்து விட்டு செல்லும் வரை பக்தர்கள் யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை.

சமயபுரம் நால்ரோட்டில் இருந்து கடைவீதி மற்றும் கோவில் வரை பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அதன் பணியாளர்கள் தூய்மை பணியை மேற்கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com