விவசாயிகளுக்கு நிலுவைத் தொகை வழங்கக்கோரி கரும்புகளை கையில் ஏந்தி இந்திய ஜனநாயக கட்சியினர் ஆர்ப்பாட்டம்

விவசாயிகளுக்கு நிலுவைத் தொகை வழங்கக்கோரி கரும்புகளை கையில் ஏந்தி இந்திய ஜனநாயக கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
விவசாயிகளுக்கு நிலுவைத் தொகை வழங்கக்கோரி கரும்புகளை கையில் ஏந்தி இந்திய ஜனநாயக கட்சியினர் ஆர்ப்பாட்டம்
Published on

தஞ்சாவூர்,

தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு இந்திய ஜனநாயக கட்சி சார்பில் நேற்றுகாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மேற்கு மாவட்ட தலைவர் சிமியோன் சேவியர்ராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் வினோபா, ஒன்றிய தலைவர்கள் முருகானந்தம், அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய தலைவர் திருமாறன் வரவேற்றார்.

இதில் மாநில தலைவர் ஜெயசீலன், மாநில முதன்மை அமைப்பு செயலாளர் வெங்கடேசன், மாநில கொள்கை பரப்பு செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில், குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலைக்கு கரும்பு அனுப்பிய விவசாயிகளுக்கு கடந்த 2015-16 மற்றும் 2016-17-ம் ஆண்டிற்கான மாநிலஅரசு அறிவித்த விலை டன் ஒன்றுக்கு ரூ.450 வீதம் 2 ஆண்டுகளுக்கு ரூ.900 பாக்கி வைத்துள்ளது. ஏறத்தாழ ரூ.30 கோடி நிலுவைத் தொகை வழங்கப்படாமல் உள்ளது. இந்த தொகையை தீபாவளி பண்டிகைக்குள் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.

நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2 ஆயிரம் வழங்க வேண்டும். நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் சாக்கு, சணல் தட்டுப்பாடு இன்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். திருவையாறு புறவழிச்சாலையை உடனே அமைக்க வேண்டும். பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வந்து, விலையை குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதில் மாவட்ட பொருளாளர் முத்துகிருஷ்ணன், மகளிரணி செயலாளர் சீதாலட்சுமி, மாவட்ட செயலாளர் ராஜகோபால் மற்றும் பலர் கலந்து கொண்டு கையில் கரும்புகளை ஏந்தி கோஷங்கள் எழுப்பினர். முடிவில் மாநகர தலைவர் ஜஸ்டின் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com