

ஜோலார்பேட்டை,
ஜோலார்பேட்டை நகராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. அங்கு, 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். அதில் வடமாநிலத்தினர், ஆதரவற்றோர் பலர் உள்ளனர். கொரோனா ஊரடங்கால் வேலை வாய்ப்பை இழந்த அவர்கள் உணவுக்காக சிரமப்பட்டு வருகின்றனர்.
அவர்களின் நலன் கருதி அ.தி.மு.க. நகர செயலாளர் எஸ்.பி.சீனிவாசன் 1,500 உணவுப் பொட்டலங்களை வழங்க ஏற்பாடு செய்தார். அவரின் தலைமையில், நகராட்சி ஆணையாளர் சி.ராமஜெயம் நேற்று புதூர் பகுதியில் உணவுப் பொட்டலங்களை வழங்கி, பணியை தொடங்கி வைத்தார்.
அதைத்தொடர்ந்து நகராட்சி பகுதியில் உள்ள 18 வார்டுகளிலும் உள்ள ஆதரவற்றோர், வடமாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு மதிய உணவாக 1,500 உணவுப் பொட்டலங்கள் தன்னார்வலர்கள் மூலமாக வழங்கப்பட்டன.