பழவூர் அருகே கைலாசநாதர் கோவில் கும்பாபிஷேகம் அமைச்சர்கள் பங்கேற்பு

பழவூர் அருகே தெற்கு கருங்குளத்தில் பழமை வாய்ந்த கோமதி அம்பாள் சமேத கைலாசநாதர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.
பழவூர் அருகே கைலாசநாதர் கோவில் கும்பாபிஷேகம் அமைச்சர்கள் பங்கேற்பு
Published on

வள்ளியூர்,

நேற்று காலையில் கணபதி ஹோமம், புண்யாகவாசனம், பூர்ணாகுதி பூஜைகள் நடந்தது. காலை 10.20 மணிக்கு கோபுர விமானத்துக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடந்தது.

விழாவில் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, ராஜலட்சுமி, எம்.எல்.ஏ.க்கள் இன்பதுரை, ரெட்டியார்பட்டி நாராயணன், நெல்லை மத்திய கூட்டுறவு சங்க தலைவர் தச்சை கணேசராஜா, ராதாபுரம் ஒன்றிய செயலாளர் அந்தோணி அமல்ராஜா, அவைத்தலைவர் செல்வராஜ், கேப் கல்விக்குழும தலைவர் கிருஷ்ணபிள்ளை, தினேஷ் உள்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை வள்ளியூர் ஒன்றிய முன்னாள் தலைவர் அழகானந்தம், கோவில் நிர்வாகக்குழு தலைவர் மணிகண்டன் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com