ஐகோர்ட்டு தீர்ப்பின் மூலம் சட்டம் பேசியுள்ளது கவர்னர் கிரண்பெடி கருத்து

ஐகோர்ட்டு தீர்ப்பின் மூலம் சட்டம் பேசியுள்ளது என்று கவர்னர் கிரண்பெடி கருத்து தெரிவித்துள்ளார்.
ஐகோர்ட்டு தீர்ப்பின் மூலம் சட்டம் பேசியுள்ளது கவர்னர் கிரண்பெடி கருத்து
Published on

புதுச்சேரி,

புதுவை மாநில அரசு அதிகாரம் குறித்த வழக்கில் ஐகோர்ட்டு அளித்துள்ள தீர்ப்பை தொடர்ந்து கவர்னர் கிரண்பெடி சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

சென்னை ஐகோர்ட்டின் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு மத்திய அரசு மற்றும் புதுவை நிர்வாகியின் மேல்முறையீட்டை ஏற்றுக்கொண்டுள்ளது. இந்த தீர்ப்பின் மூலம் சட்டம் பேசியுள்ளது. இதை நாம் அனைவரும் மதிக்கிறோம். புதுவை மக்களின் நன்மைக்காக ஒருமைப்பாடு மற்றும் செயல்திறனை அடிப்படையாக கொண்டு ஒன்றிணைந்து செயல்படுவோம்.

புதுவை யூனியன் பிரதேசம் பல்வேறு விஷயங்களில் சிறந்த திறனை கொண்டுள்ளது. கவர்னர் அலுவலகமும் அவரது குழுவும் சட்டத்திற்கு இணங்க புதுவை மக்களின் நன்மைக்காக பணியாற்ற உறுதியாக உள்ளது.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

நாராயணசாமி

தீர்ப்பு தொடர்பாக முதல்அமைச்சர் நாராயணசாமியிடம் கேட்ட போது, தீர்ப்பு தொடர்பான முழு விவரங்கள் எனக்கு கிடைக்கவில்லை. அது கிடைத்த பின் எனது கருத்தை தெரிவிக்கிறேன் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com