பொய் பேசுவது பிரதமர் மோடியின் பிறவி குணம் - மல்லிகார்ஜுன கார்கே கடும் தாக்கு

பொய் பேசுவது பிரதமர் மோடியின் பிறவி குணம் என்று மல்லிகார்ஜுன கார்கே கடுமையாக சாடியுள்ளார்.
பொய் பேசுவது பிரதமர் மோடியின் பிறவி குணம் - மல்லிகார்ஜுன கார்கே கடும் தாக்கு
Published on

பெங்களூரு,

நாடாளுமன்ற காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலபுரகியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அமேதி தொகுதியில் ராகுல்காந்தி வெற்றிபெற மாட்டார் என்று பிரதமர் மோடி கூறுகிறார். அமேதி மற்றும் ரேபரேலி ஆகிய தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றால், மோடி தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்வாரா?.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி மீதான ஊழல் புகார்கள் 30 ஆண்டுகளுக்கு முன்பே தள்ளுபடி செய்யப்பட்டு விட்டன. ஆனாலும் இந்த விஷயத்தை மோடி மீண்டும் கிளறுகிறார். இது கண்டிக்கத்தக்கது. பொய் பேசுவது தான் மோடியின் பிறவி குணம்.

நாட்டிற்காக உயிர்த்தியாகம் செய்த ராஜீவ்காந்தி பற்றி கீழ்த்தரமாக பேசுவது சரியல்ல. மோடிக்கு இதயமே இல்லை. தேசபக்தியும் இல்லை. எந்த விஷயம் பற்றி பேச வேண்டும், எதுபற்றி பேசக்கூடாது என்கிற குறைந்தபட்ச அறிவுகூட அவருக்கு இல்லை.

இத்தகையவர் நமது பிரதமராக இருப்பது மக்களின் துரதிர்ஷ்டம். வெறும் பேச்சு முன்னேற்றத்திற்கு உதவாது. மோடிக்கு இந்த தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவர். கலபுரகி தொகுதியில் நான் வெற்றி பெறுவது உறுதி. இவ்வாறு மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com