கடம்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.18 லட்சத்தில் புதிய சித்த மருத்துவ கட்டிடம் அமைச்சர் திறந்துவைத்தார்

கடம்பூர் அரசு ஆரம்ப சுகாதாரநிலையத்தில் ரூ.18லட்சத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள சித்த மருத்துவ கட்டிடத்தை அமைச்சர் கடம்பூர் ராஜூ திறந்து வைத்தார்.
கடம்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.18 லட்சத்தில் புதிய சித்த மருத்துவ கட்டிடம் அமைச்சர் திறந்துவைத்தார்
Published on

கயத்தாறு,

கயத்தாறு யூனியன் சிதம்பரபுரம் பகுதியில் சிமெண்டு சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அந்த பணியை நேற்று அமைச்சர் கடம்பூர் ராஜூ பாரவையிட்டு அங்கு ரூ.10 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் எந்திரத்தை அமைச்சர் இயக்கி வைத்து, குடிநீர் வினியோகத்தை தொடங்கி வைத்தார்.

சித்தமருத்துவ கட்டிடம் திறப்பு

பின்னர் சிதம்பரபுரம், சொக்கலிங்கபுரம், அச்சன்குளம் பகுதியில் தலா ரூ.10 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு எந்திரத்தை தொடங்கி வைத்த அமைச்சர், கடம்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.18 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய சித்த மருத்துவ கட்டிடத்தை திறந்துவைத்தார்.

காமநாயக்கன்பட்டி, புங்கவர்நத்தம், அச்சங்குளம், சுப்பிரமணியபுரம், சால்நாயக்கன்பட்டி உள்பட பல்வேறு கிராமங்களில் சாலை பணிகள் மற்றும் சமுதாய கூடம் ஆகியவற்றை அமைச்சர் தொடங்கி வைத்தார்.

கலந்துகொண்டவர்கள்

நிகழ்ச்சியில் கலெக்டர் சந்தீப் நந்தூரி, மாவட்ட திட்ட அலுவலர் தனபதி, விளாத்திகுளம் தொகுதி எம்.எல்.ஏ. சின்னப்பன், கோவில்பட்டி உதவிகலெக்டர் விஜயா, கயத்தாறு தாசில்தார் பாஸ்கரன், அதிமுக ஒன்றிய செயலாளர்வினோபாஜி, ஜெயலலிதா பேரவை ஒன்றிய செயலாளர் வண்டானம் கருப்பசாமி, மாவட்ட கவுன்சிலர்கள் ப்ரியாகுருராஜ், சந்திரசேகரன், கயத்தாறு யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனிவாசன், சசிக்குமார், கடம்பூர் முன்னாள் நகரபஞ்சாயத்து தலைவர் நாகராஜா, நகர ஜெயலலிதா பேரவை செயலாளர் மோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com