மாயனூர்-உப்பிடமங்கலம் பகுதிகளில் ரூ.11¾ கோடியில் திட்ட பணிகள் அமைச்சர் தொடங்கி வைத்தார்

மாயனூர்-உப்பிடமங்கலம் பகுதிகளில் ரூ.11¾ கோடியில் திட்ட பணிகள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.
மாயனூர்-உப்பிடமங்கலம் பகுதிகளில் ரூ.11¾ கோடியில் திட்ட பணிகள் அமைச்சர் தொடங்கி வைத்தார்
Published on

கிருஷ்ணராயபுரம்,

கரூர் மாவட்டம் புலியூர் பேரூராட்சி செட்டிபாளையம் முதல் வளம்மீட்பு பூங்கா வரை ரூ.50 லட்சம் மதிப்பில் அணுகுசாலை அமைக்கவும், மாயனூர் தென்கரை வாய்க்கால், கிருஷ்ணராயபுரம் வாய்க்கால், புதிய கட்டளை மேட்டுவாய்க்கால், மற்றும் வடகரை வாய்க்கால் மீது ரூ.6 கோடியே 66 லட்சம் மதிப்பில் இருவழி பாலம் கட்டவும், உப்பிடமங்கலம் பேரூராட்சி வடக்கு கேட் முதல் பழைய ரெங்கபாளையம் வரை ரூ.75 லட்சம் மதிப்பில் தார்சாலை அமைப்பது என்பன உள்ளிட்ட மொத்தம் ரூ.11 கோடியே 76 லட்சம் மதிப்பிலான திட்ட பணிகள் தொடங்குவதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பூஜை செய்து திட்ட பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ. ம.கீதா மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ், காவிரி ஆற்றுபாதுகாப்பு கோட்ட செயற்பொறியாளர் சரவணன், பேரூராட்சி செயல் அலுவலர்கள் பாலசுப்பிரமணியன், சுப்பிரமணியன், பானுஜெயரானி, சிவக்குமார், வட்டார வளர்ச்சி அதிகாரி புவனேஸ்வரி மற்றும் ஒன்றிய செயலாளர் எம்.எஸ்.மணி, மாவட்ட துணை செயலாளர் பி.சிவசாமி, தொழிற்சங்க செயலாளர் பொரணி கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் புதிய கட்டளை மேட்டுவாய்க்கால், மற்றும் வடகரை வாய்க்கால் மீது இருவழி பாலம் கட்டப்பட உள்ள இடத்தை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பார்வையிட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com