திருச்சி, கரூர், புதுக்கோட்டை மாவட்டங்களை சேர்ந்த பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு தினத்தந்தி வழங்கும் ‘கல்வி நிதி’ - கலெக்டர் கே.ராஜாமணி நாளை வழங்குகிறார்

திருச்சி, கரூர், புதுக்கோட்டை மாவட்டங்களை சேர்ந்த பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு தினத்தந்தி வழங்கும் கல்வி நிதியை, கலெக்டர் கே.ராஜாமணி நாளை வழங்குகிறார்.
திருச்சி, கரூர், புதுக்கோட்டை மாவட்டங்களை சேர்ந்த பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு தினத்தந்தி வழங்கும் ‘கல்வி நிதி’ - கலெக்டர் கே.ராஜாமணி நாளை வழங்குகிறார்
Published on

திருச்சி,

தினத்தந்தி வழங்கும் கல்வி நிதி பெற தகுதி பெற்றுள்ள திருச்சி, கரூர், புதுக்கோட்டை மாவட்டங்களை சேர்ந்த பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய 30 மாணவ-மாணவிகளுக்கு ரொக்கப்பரிசு வழங்கும் விழா நாளை (வியாழக்கிழமை) திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெறுகிறது. விழாவில் திருச்சி மாவட்ட கலெக்டர் கே. ராஜாமணி கல்வி நிதியை வழங்குகிறார்.

கல்விப்பணியில் பல புரட்சிகளை செய்து மாணவர்களுக்கு வழிகாட்டி வரும் தினத்தந்தி சார்பில் மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்க வேண்டும் என்பதற்காக எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 தேர்வுகளில் மாநில அளவில் முதல் மதிப்பெண் பெறும் மாணவ-மாணவிகளுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்பட்டு வந்தது.

மேலும் மாணவர் பரிசு திட்டத்தின்படி மாவட்டந்தோறும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகள் அனைவருக்கும் ரொக்கப்பரிசு மற்றும் தினத்தந்தியின் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

2014-15-ம் கல்வி ஆண்டு முதல் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் அதிக மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்று பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய மாணவர்கள் மேற்படிப்பை தொடர்வதற்கு வசதியாக தினத்தந்தி கல்வி நிதி திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் மாவட்டத்துக்கு 10 மாணவ-மாணவிகள் வீதம் தமிழகம், புதுச்சேரியில் 340 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.34 லட்சம் பரிசு பெற தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி 2017-18-ம் கல்வி ஆண்டில் திருச்சி மாவட்டத்தில் தலா ரூ.10 ஆயிரம் தினத்தந்தி கல்வி நிதி பெற தகுதி பெற்றுள்ள 10 மாணவ- மாணவிகள் பெயர் விவரம் வருமாறு:-

10) வி. ஆனந்தகுமாரி, ஹோலிகிராஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருச்சி.

10) டி.ஹரிணி, அரசு மேல்நிலைப்பள்ளி, கடவூர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com