அரசுத்துறைகளின் செயல்பாடுகளை பொதுமக்கள் தெரிந்துகொள்ள நவீன தொழில்நுட்பத்துடன் புதிய ‘வலைதளம்’ - கலெக்டர் தொடங்கி வைத்தார்

அரசுத்துறைகளின் செயல்பாடுகளை பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில், நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய வலைதளத்தை கலெக்டர் டி.ஜி.வினய் தொடங்கி வைத்தார்.
அரசுத்துறைகளின் செயல்பாடுகளை பொதுமக்கள் தெரிந்துகொள்ள நவீன தொழில்நுட்பத்துடன் புதிய ‘வலைதளம்’ - கலெக்டர் தொடங்கி வைத்தார்
Published on

திண்டுக்கல்,

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், மாவட்ட தகவலியல் மையம் மூலமாக பொதுமக்கள் எளிதாக பயன்படுத்தக்கூடிய வகையில், நவீன தகவல் தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய மாவட்ட வலைதளத்தை (வெப்சைட்) கலெக்டர் டி.ஜி.வினய் தொடங்கி வைத்தார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திண்டுக்கல் மாவட்ட வலைதளத்தை https://di-n-d-i-gul.nic.in என்ற இணைப்பின் மூலம் எளிதாக காணலாம். இந்த வலைதளத்தில் தமிழக அரசால் செயல்படுத்தப்படும் பல்வேறு நலத்திட்டங்கள், அரசுத்துறைகளின் செயல்பாடுகள், ஒப்பந்தப்புள்ளி வெளியீடு, பத்திரிகை செய்திகள் மற்றும் பிற அரசுத்துறை சார்ந்த செய்திகளை தெரிந்து கொள்ளலாம்.

ஸ்மார்ட் போன், டேப்லெட், மடிக்கணினி உள்ளிட்ட அனைத்து தகவல் தொடர்பு சாதனங்கள் மூலமும் இந்த வலைதளத்தை பயன்படுத்தலாம். இந்த வலைதளம் தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் வடிவமைக்கப்பட்டது. மேலும், இந்திய அரசின் தகவல் தொடர்பு விதிமுறைகளை முழுமையாக பின்பற்றி அனைத்து வலைதள பாதுகாப்பு அம்சங்களுடனும் உருவாக்கப்பட்டுள்ளது.

மாவட்ட நிர்வாகத்தின் வெளிப்படையான செயல்பாடுகளை உறுதிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த வலைதளத்தை பயன்படுத்தி பொதுமக்கள் தாங்கள் இருக்கும் இடங்களில் இருந்தே அரசுத்துறையின் பல்வேறு சேவைகளையும், விவரங்களையும் பெற்று பயனடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com